ஜின்னா செய்ததைத்தான் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸூம் செய்கின்றன... அசாம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

 
பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

ஜின்னா செய்ததைத்தான் (நாட்டை பிரித்தல்) பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸூம் செய்கின்றன என அசாம் எம்.எல்.ஏ. ரபிகுல் இஸ்லாம் குற்றம் சாட்டினார்.

அசாமில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (ஏ.ஐ.யு.டி.எப்.) எம்.எல்.ஏ. ரபிகுல் இஸ்லாம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜின்னா நாட்டை இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாக பிரித்தார். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸூம் அதையே செய்கின்றன. மேலும் அவர்கள் இந்து மற்றும் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் தலித் அல்லாதவர்கள் என பிரிக்கிறார்கள்.

ரபிகுல் இஸ்லாம்

சாதி, சமூகம், மத அடிப்படையில் மக்களை பிரிப்பதை எங்கள் கட்சி ஆதரிக்காது. ஆனால் பா.ஜ.க. அரசு வெறுப்புணர்வை பரப்பி வருகிறது. இது நல்ல அறிகுறி அல்ல. தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை பிரதமர் ஆதரிக்கிறார். காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்க வேண்டும்.

முகமது அலி ஜின்னா

காஷ்மீரில் நடந்த கொலைகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு பிரதமர் மற்றும் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்க வேண்டும். காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி உறுதி செய்யப்பட வேண்டும். எனினும் வெறுப்பை பரப்புவதே பா.ஜ.க.வின் குறிக்கோள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.