பா.ஜ.க. இன்னும் 6 ஆண்டுகளில் அழிந்து விடும், அதன் வீழ்ச்சிக்கு பீகார்தான் தொடக்கப்புள்ளி... அசாம் எம்.எல்.ஏ.

 
கரீம் உதீன் பர்புய்யா

பா.ஜ.க. இன்னும் 5 முதல் 6 ஆண்டுகளில் அழிந்து விடும் அதன் வீழ்ச்சிக்கு பீகார்தான் தொடக்கப்புள்ளி என்று அசாம் எம்.எல்.ஏ. கரீம் உதீன் பர்புய்யா தெரிவித்தார்.

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யு.டி.எப்.) கட்சியின் மூத்த தலைவரும்,  அசாம் மாநிலம் சோனாய் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கரீம் உதீன் பர்புய்யா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. இன்னும் 5 முதல் 6 ஆண்டுகளில் அழிந்து விடும். பா.ஜ.க.வின் வீழ்ச்சிக்கு பீகார்தான் தொடக்கப்புள்ளி. மக்கள் மீண்டும் பா.ஜ.க.வை ஏற்கமாட்டார்கள்.

பா.ஜ.க.

செப்டம்பர் 2ம் தேதியன்று, காங்கிரஸ் கட்சியின் பார்பேட்டா மாவட்ட தலைவர், மாநில பொதுச் செயலாளர் உள்பட  அந்த கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இணைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். பா.ஜ.க. இன்னும் 6 ஆண்டுகளில் அழிந்து விடும் என்று கரீம் உதீன் பர்புய்யா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதுருதீன் அஜ்மல்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பதுருதீன் அஜ்மல் கடந்த சில தினங்களுக்கு பேட்டி ஒன்றில், காங்கிரஸ் ஒரு மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல். இப்போது அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அசாமில் இருந்து பா.ஜ.க.வை அகற்றுவதற்கான உந்தலுக்கு வழிவகுக்கும். அசாமில் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து வருகிறது. எனவே அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எழுச்சி பெற வேண்டிய நேரம் இது என தெரிவித்தார்.