காங்கிரஸ் அகங்காரத்துடன் இருக்கிறது, அடிப்படை யதார்த்தத்தை அறியவில்லை... அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு

 
கடைசி நொடி வரை திட்டமிடாத, அரசியலமைப்புக்கு விரோதமான லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது….. மத்திய அரசு மீது அசாதுதீன் ஓவைசி தாக்கு

காங்கிரஸ் அகங்காரத்துடன் இருக்கிறது, அடிப்படை யதார்த்தத்தை அறியவில்லை என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தையொட்டி, ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே  பங்கேற்றார். அந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன் கார்கே  பேசுகையில், பா.ஜ.க. அல்லாத ஆட்சியை யாராவது கொண்டு வந்தால், ராகுல் காந்தியின் தலைமையில், காங்கிரஸ் தலைமையின் கீழ், நாங்கள் அதை செய்வோம். அந்த வலிமை எங்களிடம் உள்ளது என தெரிவித்தார். 

எதிர்க்கட்சிகளை பேச மத்திய அரசு அனுமதிக்கவில்லை..குரல் இல்லையென்றால் எப்படி பேச முடியும்?.. மல்லிகார்ஜூன் கார்கே

2024 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன் கார்கே முன்மொழிந்ததை அசாதுதீன் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் தாங்கள் எப்படி மோசமான தோல்வியை சந்தித்தோம் என்பதை காங்கிரஸ் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 

ராகுல் காந்தி

ராகுல் காந்தி தனது அமேதி தொகுதியை விட்டு வெளியேறி வயநாடுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட சென்றால் நான் அவருக்கு ஆக்ஸிஜனை அணைத்து விட்டேனா?. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களின் எண்ணிக்கை 50க்கும் கீழ் குறைந்ததால் அவர்களுக்கு (காங்கிரஸ்) ஆக்சிஜனை அணைத்தது யார்?. காங்கிரஸ் அகங்காரத்துடன் இருக்கிறது, அடிப்படை யதார்த்தத்தை அறியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.