பிரியாணி விருந்துகளை நடத்தி மத்திய பிரதேச வாக்காளர்களை கவரும் அசாதுதீன் ஓவைசி கட்சி

 
பிரியாணி

மத்திய பிரதேசத்தில், மக்களை அதிகளவில் ஈடுபடுத்தவும், கட்சியின் பலத்தை அதிகரிக்கவும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியினர் அந்த மாநிலத்தில் பிரியாணி விருந்துகளை நடத்தி தனித்துவமான பிரச்சாரத்தை  தொடங்கியுள்ளனர்.

2023ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டியிட  அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி திட்டமிட்டுள்ளது. போபால், இந்தூர், ஜபல்பூர், கந்த்வா, கர்கோன் மற்றும் புர்ஹான்பூர் போன்ற நகரங்களில் போட்டியிடும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி வேட்பாளர்கள் இப்போதே தேர்தல் வேலை செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் தனித்துவமான பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

ஏ.ஐ.எம்.ஐ.எம்.

மக்களை அதிகளவில் ஈடுபடுத்தவும், கட்சியின் பலத்தை அதிகரிக்கவும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி மத்திய பிரதேசத்தில் பிரியாணி விருந்துகளை  ஏற்பாடு செய்து வருகிறது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நரேலா தொகுதி வேட்பாளருமான பீர்சாதா தவுகிர் நிஜாமி இது தொடர்பாக கூறியதாவது: மக்கள் விருந்துக்கு சென்று அதிதி டெவோன் பாவாவின் கீழ் சுவையான பிரியாணி சாப்பிடுகிறார்கள். நரேலா சட்டப்பேரவை தொகுதியில் உள்ளவர்களில் 40 சதவீதம் பேர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

சுமார் 25 ஆயிரம் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியில்  இணைந்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியில் 10 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பதே எங்கள் முயற்சி. மக்கள் ஆர்வத்துடன் ஒவைசியிடம் வருகிறார்கள். இந்தியாவில் ஒவைசிக்கு பிறகு நரேலா ஹைதராபாத் பிரியாணி மிகவும் பிரபலமானது, அதில் மக்களை ஈடுபடுத்துவதற்காக  நாங்கள் பிரியாணி விருந்துகளை வழங்குகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.