பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி நாட்டில் பொய்களை பரப்பி வருகிறது... அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு
பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி நாட்டில் பொய்களை பரப்பிர வருகிறது என அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: கடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலின் போது, பா.ஜ.க. மற்றும் சிவ சேனாவை தடுக்க முடியும் என்பதால் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஓவைசிக்கு ஓட்டு கேட்டனர்.
தேர்தலுக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ், சிவ சேனாவை திருமணம் (கூட்டணி) செய்து கொண்டனர். மூன்று கட்சிகளில் யார் மணமகன் என்று தெரியவில்லை. வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சினைகளை பற்றி பேசுவதற்கு பதிலாக, முஸ்லிம்களுக்கு கட்சியின் பயம் காட்டப்படுகிறது. பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி நாட்டில் பொய்களை பரப்பி வருகிறது. இந்த இந்தியா என்னுடையதோ, உத்தவ் தாக்கரேவின்தோ, மோடியோ, அமித் ஷாவினதோ இல்லை.
இந்தியா யாருக்கு சொந்தமானது என்றால், அது திராவிடர்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. நான் இடங்களில் இருந்து மக்கள் வந்துள்ளனர். ஆனால் முகலாயாகளுக்கு பிறகுதான் பா.ஜ.க. வந்துள்ளது. பிரதமர் மோடி, உத்தவ் தாக்கரே, சரத் பவார் அல்லது யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக யாராவது பேசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் நமது நம்பிக்கைக்கு எதிராக யாராவது ஏதாவது சொன்னால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.