மோடியின் பலவீனமான சீன கொள்கையால் பல தசாப்தங்களுக்கு இந்தியா விலை கொடுக்க வேண்டியது இருக்கும்... ஓவைசி தாக்கு

 
மோடி

மோடியின் பலவீனமான சீன கொள்கையால் பல தசாப்தங்களுக்கு (பத்தாண்டுகள்) இந்தியா விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

இந்திய எல்லையில் சீன ராணுவம் அத்துமீறிலில் ஈடுபட்டதை தொடர்ந்து, நம் நாட்டில் சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் சுமார் 80  சீன அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சீனா

சீன அன்னிய முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட விஷயத்தில் பிரதமர் மோடியை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கடுமையாக தாக்கியுள்ளார். அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில், சீன முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பான செய்தியை பதிவேற்றம் செய்து, மோடியின் பலவீனமான சீன கொள்கையால் பல தசாப்தங்களுக்கு (பத்தாண்டுகள்) இந்தியா விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

அசாதுதீன் ஓவைசி

இந்தியாவில் சீன முதலீடுகளை கட்டுப்படுத்திய பிறகு, மோடி இப்போது யு-டர்ன் செய்து சீனாவின் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க தொடங்கியுள்ளார். லடாக் மற்றும் அருணாசல பிரதேசத்தில் உள்ள இந்திய பகுதியை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது என பதிவு செய்து இருந்தார்.