அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் -ஓபி ரவீந்திரநாத் எம்பி

 
p

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்பது உறுதியானது என்கிறார் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம் பி.

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான்.  அந்த இடத்திற்கு வேறு யாரும் இனி வர முடியாது; வரக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் முடிவு எடுத்து அதற்கு பதிலாக அதிமுகவை இரட்டை தலைமையாக கொண்டு வந்து ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பொறுப்புகளை உருவாக்கினர் . ஆனால் திடீரென்று எடப்பாடி பழனிச்சாமி தன்னிச்சையாக முடிவு எடுத்து ஒருங்கிணைப்பாளர் , இணைய ஒருங்கிணைப்பாளர் என்கிற புதிய பொறுப்புகளை தூக்கி எறிந்து விட்டு அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவதற்காக எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து,  பொதுக்குழுவை கூட்டி தனது ஆதரவாளர்களை வைத்து இடைக்கால பொதுச்செயலாளர் என்று தன்னை அறிவித்துக் கொண்டார்.

oooo

ஆனால் இது செல்லாது என்று ஓபிஎஸ் சட்டப் போராட்டம் நடத்தினார்.  இந்த சட்டப் போராட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.  அவர் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதும் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது .  பொதுக்குழுவுக்கு முந்தைய நிலைதான் அதாவது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,  இணைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்கிற நிலையே தொடர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்து இருக்கிறது.

தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம் பி செய்தியாளர்களிடம் பேசிய போது,   அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்பது உறுதியாகி  இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.