அதிமுகவில் பரபரப்பு - முக்கிய புள்ளிகளை விசாரிக்க கோர்ட் அனுமதி...

 
mg

அதிமுகவில் சில முக்கிய புள்ளிகளை விசாரிக்க கோர்ட் அனுமதி மிக விரைவில் கிடைக்கப் போவதாக தகவல் பரவுகின்றன.  கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் இந்த விசாரணை நடைபெற இருப்பதாக தகவல்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடந்து வரும்  மறு விசாரணையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.  இந்த ஐந்து தனிப்படைகளும் இதுவரைக்கும் 250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.   சசிகலாவிடம் சென்னை தி. நகர் இல்லத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.  ஜெயா டிவி  நிர்வாகி இளவரசி மகன் விவேக்கை கோவைக்கு அழைத்து விசாரணை நடத்தி இருந்தனர்.

po

 இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ், உதயன், சந்தோஷ் சாமி உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த வழக்கின் விசாரணையினை உதகை நீதிமன்றம் அடுத்த மாதம் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது.  இந்த வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் குறித்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

 கனகராஜ் கார் விபத்தில் இறந்தபோது அப்போது சேலம் சரக டிஐஜி ஆக இருந்த செந்தில்,  இது ஒரு விபத்துதான். விபத்தின்போது கனகராஜ் மது அருந்தி இருந்தார் என்று பதிவு செய்திருக்கிறார்.   ஆனால் கனகராஜின் உறவினர்களும் குடும்பத்தினரும் அவர் கார் விபத்தில் இறக்கவில்லை அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பது என்று தெரிவித்து இருந்தார்கள்.   அப்போது அதிமுக ஆட்சி நடந்து வந்ததால் இந்த புகார் குறித்து கண்டுகொள்ளப்படவில்லை.  ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இந்த புகார் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.

as

 கனகராஜ் மனைவி கலைவாணி,   கணவரின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.   இந்த வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக, தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.  இந்த நிலையில் கனகராஜின் இன்னொரு சகோதரர் பழனிவேல்,  தனது சகோதரர் மனைவியான கலைவாணியிடம்,  போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும். இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் . இதனால் ஜலகண்டபுரம் போலீசார்  அவரை கைது செய்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள்  மற்றும் கனகராஜ் மரணம் தொடர்பாக அதிமுகவின் முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாக சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தன.

இந்த நிலையில்,  கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் சில முக்கிய புள்ளிகளை விசாரிக்க கோர்ட் அனுமதி மிக விரைவில் கிடைக்கப் போவதாக தகவல்கள் கிடைக்கின்றன என்று அதிமுகவின் முன்னாள் ஐடி விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதனும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.