திமுகவை அலறவிட்ட அதிமுக : ங்கொம்மாக்கும்.. நான் ஓசியில வரமாட்டேன்..

 
d

ங்கொம்மாக்கும் ஆயிரம்  பொண்ணுக்கும்  ஆயிரம் .. சில்லறை மாத்திக்கிட்டு இருக்கோம்; சீக்கிரம் கொடுத்திடுவோம்  என்று திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,  முன்னதாக திமுக மூத்த அமைச்சர் பொன்முடி,  பெண்களுக்கு இலவச பயணம் என்பதை, ஓசியில் பயணம் என்று ஏளனம் செய்திருந்தார்.


பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்கிற சிறந்த திட்டத்தை கொண்டு வந்தார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.  இதனால் பேருந்தில் நடத்துநர்கள் பெண்களை ஏளனமாக பார்த்து வந்ததை அடுத்து பல இடங்களில் தகராறு ஏற்பட்டது.   இதை முதல்வர் கடுமையாக கண்டித்தார்.   மூத்த அமைச்சர் துரைமுருகனே கடுமையாக  கண்டித்தார்.   பெண்களை இழிவாக ஏளனம் செய்தால்  உடனே பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார்.  ஆனால் அந்த மூத்த  அமைச்சர் துரைமுருகனே பெண்களை இழிவு படுத்தி பேசியுள்ளார். 

 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பெண்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில்,   சில்லரை மாத்திக்கிட்டு இருக்கோம் சீக்கிரம் கொடுத்திடுவோம்.   ங்கொம்மாக்கும் ஆயிரம் ஆயிரம் பொண்ணுக்கும் ஆயிரம் என்று மிக நக்கலாக  பேசியது பெண்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 முன்னதாக பேருந்தில் பெண்களை இலவசமாக பயணம் செய்வதை நடத்துனர்கள் ஏளனமாக ஆங்காங்கே பார்த்து வருவது ஒரு பக்கம் இருக்க,  திமுகவின் மூத்த அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் என்று ஏளனம் செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது .


இந்த நிலையில் அரசு பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர், டிக்கெட்டு கேட்க,  அதற்கு நடத்துனர் பெண்களுக்கு டிக்கெட் கிடையாது என்று சொல்ல , தமிழ்நாடே ஓசியில் போனாலும்  நான் ஓசியில் வரமாட்டேன் என்று  நடத்துனரிடம் அடம்பிடித்து டிக்கெட்டை வாங்கி இருக்கிறார்.  இந்த வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகிறது. 

இதனால்  திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி,  ‘’கோவை அதிமுக IT WING -ஐ சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து,  அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்!’’ என்று கூறியிருக்கிறார்.