அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையா?

 
ad


 அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறதா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.  தடை விதிக்கக் கோரிய வழக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.   இதையடுத்தே இந்த பரபரப்பு எழுந்திருக்கிறது.

 அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதியன்று சென்னை வானகரத்தில் நடைபெற இருக்கிறது .  இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2900 உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.   பொதுக்குழுவில் பிற அணிகளின்  மாவட்டச் செயலாளர்கள்,  நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பது வழக்கம்.  ஆனால் இந்த முறை பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை  என்பதை எடப்பாடி பழனிச்சாமியே அறிவித்துள்ளார்.

o

 நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் தலை தூக்கியிருக்கிறது.  பொதுக்குழுவில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து அப்போது குழுவில் ஒற்றை தலைமை கொண்டுவரப்படும் என்பதற்கான அச்சாரமாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது.

 இதனால் தற்போது இருக்கும் இரட்டை தலைமை எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கிறது.  இருவரின் ஆதரவாளர்களும்  போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.   இருவரின் ஆதரவாளர்களும்  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வீடுகளில் குவிந்து தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.   கட்சியின் சீனியர்கள் இருதரப்பிலும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.