ஆன்லைன் மூலம் அதிமுக பொதுக்குழு? விடாப்பிடியாக நிற்கும் எடப்பாடி

 
eப்

 எப்படியும் பொதுக்குழுவை நடத்தியே தீருவது என்று விடாப்பிடியாக நிற்கிறார் எடப்பாடி.   இதற்காகத்தான் கொரோனா காரணங்களால் அனுமதி கிடைக்காது போனாலும் ஆன்லைன் மூலமாக பொதுக்குழுவை நடத்தவும் அவர் ஆலோசித்து வருகிறாராம். 

 அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி சென்னை மாநகரத்தில் ஸ்ரீ வாரு மண்டபத்தில் கூடுகிறது .  இந்த பொதுக்குழுவில் தான் எப்படியும் பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறார் எடப்பாடி.   இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால் ஸ்ரீவாரு  மண்டபத்தின் உள்ளே பொதுக்குழு கூட்டத்தை நடத்தாமல் திருமண மண்டபத்திற்கு வெளியே வாகனங்கள் நிற்கும் இடத்தில் சமூக  இடைவெளியுடன் 3000 பொதுக்குழு உறுப்பினர்கள் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆ

 அப்படியும் பொதுக்குழு நடத்த கொரோனா தொற்று பாதிப்பை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி அளிக்க மறுத்து விட்டால்,  அதற்கு மாற்று ஏற்பாடு என்ன என்று ஆலோசனை நடத்தி இருக்கிறார் எடப்பாடி.   பொதுக்குழுவை தள்ளிப் போட்டால் தான் பொதுச்செயலாளராகும் முயற்சியும் நடந்து விடாமல் போய்விடும் என்பதால் திட்டமிட்டபடி எப்படியும் பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறாராம் எடப்பாடி.

 அதனால்தான்  கொரோனா காரணத்தினால் அனுமதி கிடைக்காமல் போய்விட்டாலும் ஆன்லைன் மூலமாகவாவது பொதுக்குழுவை நடத்தி விட வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறாராம் எடப்பாடி.  இதை பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறதாம்.  பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும்  அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.   தற்போது பொதுக்குழு நடத்த அனுமதி கிடைக்காத பட்சத்தில் ஆன்லைன் மூலமாக  நடைபெறும் என்றும் அந்த பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல்  தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறதாம்.