அதிமுக கொடியும் 1.5 கோடி தொண்டர்களும் இனி எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம் - பொள்ளாட்சி ஜெயராமன்
அதிமுக கொடியும், ஒன்றரை கோடி தொண்டர்களும் இனி எடப்பாடி பழனிச்சாமிக்குத் தான் சொந்தம். வேறு யாரும் கூக்குரல் இட முடியாது என்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதை அடுத்து எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர்.
எடப்பாடி ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுகவில் இனிமேல் இரட்டைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அவர் மேலும், இது அதிமுகவினர் மட்டும் எதிர்பார்த்த தீர்ப்பு கிடையாது . நாட்டு மக்களும் எதிர்பார்த்து தீர்ப்பு தான் என்றார் .
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் என்றார்.
எத்தனையோ சோதனைகளை சந்தித்து அதிமுக என்றால் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள். அதிமுகவின் கொடியும் ஒன்றரை கோடி தொண்டர்களும் இனி எடப்பாடி பழனிச்சாமிக்குத் தான் சொந்தம். இனி வேறு யாரும் கூக்குரல் இட முடியாது என்றார். அவர் மேலும், புதிய தெம்போடு திமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுக ஆட்சி அமைக்க மக்கள் தயாராவார்கள். மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பு அரணாக இருப்பார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.