அதிமுக சர்ச்சை! அண்ணாமலைக்கு டெல்லி கொடுத்திருக்கும் அசைன்மெண்ட்

 
அன்ன்

 அதிமுக -பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான பொன்னையன் பேச்சு.  அதிமுகவின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பொன்னையன் காவிரி நீர் பங்கீடு தமிழகம்  வருவதற்கு பாஜக போர்க்கொடி பிடித்து இருக்க வேண்டும்.  அதுதான் பாஜகவை வளர்க்கும்.  ஆனால் அதற்கு பதிலாக பாஜகவினர் அதிமுகபின்னுக்குத் தள்ளப்படும் என்ற பிரச்சாரத்தை மறைமுகமாக செய்து வருகின்றார்கள்.  இதன்மூலம் வளர்ச்சியடைய நினைக்கின்றார்கள்.  இதனால் அதிமுகவினர் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.  தமிழ்நாடு பாஜக நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அதிமுகவினர் அம்பலப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். 

ஒ

 பொன்னையன் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கேட்டபோது,   தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்தால் அதிமுகவிற்கு ஆபத்து என்று பொன்னையன் பேச்சு குறித்த கேள்விக்கு,   ’’எந்த கட்சி தலைவரும் அவரவர் விருப்பங்களை சொல்லலாம்.  தன்னுடைய கட்சி நம்பர் ஒன் கட்சியாக இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.  இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து ’’என்று சொன்ன அண்ணாமலை, 

அம்

’’2024 மக்களவைத் தேர்தலில் 25 எம்பிக்கள் தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பாஜக கொண்டு செல்லும்’’ என்று உறுதியாகச் சொன்னார். அவர் மேலும்,  ’’ பாஜகவை பொருத்தவரை காவிரி, மேகதாது,  முல்லைப்பெரியாறு , இந்தித் திணிப்பு விஷயத்தில் தமிழக மக்களுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்கிறது.  முல்லைப் பெரியாறு பகுதியில் ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்தி இருக்கிறோம்.  எல்லா தலைவர்களுக்கும் தங்கள் கட்சி முதன்மையாக வரவேண்டும் என்று நினைப்பது தவறு கிடையாது.   இது போன்ற விமர்சனங்கள் வரும்போது பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது . இன்றைய நிலவரப்படி பாஜக தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக இருக்கிறது . எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை தமிழகத்தில் பாஜகவை நம்பர் ஒன் கட்சியாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் .அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்’’என்றார்.