அதிமுகவை திராவிட இயக்கமாக கருத முடியாது- கனிமொழி

 
k

 சிஏஏ,  விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்த போது இதனை எதிர்த்துப் போராடாத அதிமுகவை திராவிட இயக்கமாக கருத முடியாது என்று கூறினார் திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி.

திமுக முப்பெரும் விழா தமிழகமெங்கும் அக்கட்சியினரால் தொடர்ந்து நடந்து வருகிறது.   சென்னை மயிலாப்பூரில் சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடந்தது.   இவ்விழாவில் கனிமொழி எம்பி,  திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.  வீரபாண்டியன்  பங்கேற்றனர்.

ka

 கனிமொழி எம்பி இந்த நிகழ்ச்சியில் பேசிய போது,    ’’ஒன்றிய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக சிஏஏ,  விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்தது திமுக மட்டும் தான்.   இவற்றை எதிர்த்துப் போராடாத அதிமுகவை திராவிட இயக்கமாக கருத முடியாது’’ என்றார்.

 தொடர்ந்து பேசிய கனிமொழி,   ’’அதிமுக மக்கள் பிரச்சினைகளுக்கு போராடவில்லை.  யார் தலைமைக்கு வருவது என்பதே அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது.’’ என்று விமர்சித்தார்.

 மேலும்,   ’’புதிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வி கொள்கையை கொண்டு வருகிறது ஒன்றிய அரசு.   நீட் தேர்வின் மூலமாக மருத்துவ கல்லூரிக்கு செல்லாத நிலை இருக்கிறது. அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வர முயற்சிக்கிறது.  இதை எதிர்ப்பவர் முதல்வர் மு. க. ஸ்டாலின்’’என்று பெருமிதப்பட்ட கனிமொழி, 

 திமுக ஆட்சி குறித்து,  ’’பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்.  காலநிலை மாற்றத்தை இந்தியாவிலேயே சிந்திக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.  காலம் தாண்டி மக்களுக்கு தேவையான எதிர்காலத்தை பற்றிய மக்களின் அனைத்து தேவைகளை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் ஆட்சி.   கலைஞர் ஆட்சியின் நீட்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி உள்ளது’’ என்று சொல்லி நெகிழ்ந்தார்.