“ஜெயலலிதாவின் ஆன்மா இப்பொது வேலை செய்கிறது”

 
jayalalitha

“அம்மாவின் ஆன்மா இப்பொது வேலை செய்கிறது”அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவது உறுதி என முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளருமான வி.பி.சிவசுப்பிரமணி தெரிவித்தார்.

In AIADMK, OPS & EPS factions cross swords ahead of crucial general council  meeting- The New Indian Express

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை கோரிக்கையும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் எனவும் , மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு ஆகையால் ஓ. பன்னீர்செல்வம் தான் ஒற்றை தலைமை வகிக்க வேண்டும் என அதிமுகவில் சர்ச்சைகள் வலுத்து வரும் சூழலில், நாளை மறுநாள் அதிமுக பொதுக்குழு கூட இருக்கும் நிலையில் பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று பன்னீர்செல்வம் தரப்பு முயன்று வருகிறது. ஆனால் பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துவருகிறது.

இதனிடையே ஈரோட்டில், முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளருமான வி.பி.சிவசுப்பிரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “அதிமுகவில் ஒற்றைத்தலைமையை எதிர்ப்பவர்கள் சுயநலவாதிகள். அம்மாவின் ஆன்மா இப்பொது வேலை செய்கிறது. கட்சியின் பொதுக்குழுவில், அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவது உறுதி. கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியையும் கட்சியையும் சிறப்பாக வழிநடத்தியவர். நடைபெற இருக்கிற பொதுக்குழு கூட்டத்தில் அவர் பொதுச்செயலாளராக  அவர் தேர்வு செய்யப்படுவதற்கு இப்போது  அம்மாவின் ஆன்மா வேலை செய்கிறது” எனக் கூறினார்.