அவர்கள் பஞ்சத்திற்கு திருடர்கள் இவர்கள் பரம்பரை திருடர்கள் - கடுமையாக சாடும் சீமான்

 
naam

 அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள், திமுக பரம்பரை பரம்பரை திருடர்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சீமான்.  

 பாவலேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லையில் ரஹ்மத் நகரில் இன்று மலர்வணக்கம் நிகழ்வு  நடந்தது.  இதன்பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

 எட்டாண்டு கால பாஜக அரசின் சாதனைகள் குறித்து மாவட்டம் தோறும் பாஜகவினர் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து பேசிய சீமான்,  ’’சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்பது எதற்கு?  அரசின் செயல் மக்களை சென்றடையும் போது சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேவையற்றது’’ என்றார்.

dfg

அவர் மேலும்,  ‘’மத்திய அரசின் எட்டாண்டு காலமும் தமிழக அரசின் ஓராண்டு காலமும் சாதனை அல்ல, வேதனை. சோதனை .  ஓர் ஆண்டு திமுக ஆட்சியில் ஊழல் கேட்கும் அண்ணாமலை ,  அதிமுகவின் பத்து ஆண்டு கால ஆட்சியில் ஊழல் குறித்து ஏன் கேட்கவில்லை? ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் இருக்குமா பாஜக?’’ என்று கேட்டவர்,   ’’அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள், திமுக பரம்பரை பரம்பரை திருடர்கள்’’என்று கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய சீமானிடம், ‘’வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்  கூட்டணி அமைக்காமல் இருப்பார்களா ?   திமுக பாஜகவின் பி டீம் அல்ல.  அவர்கள்தான் மெயின் டீம்.   எட்டு ஆண்டு மத்திய அரசு ஆட்சியில் ஊழலே இல்லை என்றும்,  ஊழலே செய்யவில்லை என்றும்  சொல்பவர்கள் ரபேல் போர் விமானம் விவகாரத்தில் 400 கோடி ஊழல் குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?  ரபேல் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு பதிலும் சொல்லவில்லை.’’என்றார்.

naa

தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று அக்கட்சியினர் சொல்லி வரும் நிலையில்,  தமிழகத்தின் ஒரே எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது  என்றார் சீமான்.  

2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்  என்று சொன்ன சீமான்,  இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்காமல் செய்கிறார்கள் . அது கிடைத்தால் எங்களின் வாக்கு வங்கி உயரும் என்றார்.