தமிழகத்தை சுரண்டிய 7 அமைச்சர்கள்! ரூ.186.81 கோடி சொத்துக் குவிப்பு!! பகீர் பின்னணி

 
vijayabaskar

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 7 அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ex-Minister Kamaraj DVAC Raids Premises Of AIADMK Food Supplies Minister  Associates In Chennai & Mannargudi

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் வரிசையில் 7வது அமைச்சராக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 44 லட்சம் ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாகக் கூறி அவர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி அன்பழகன், தங்கமணி ஆகிய 6 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் இதுவரை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள 7 அமைச்சர்கள் மட்டுமே வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் கோடி ரூபாய்க்கு சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Former TN Transport Minister MR Vijayabhaskar searched by DVAC officials |  The News Minute

குறிப்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது வருமானத்துக்கு அதிகமாக 6.11 கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்திருப்பதாகக் கூறி அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 22.07.2021 முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

Complete probe against former AIADMK minister, file final report in 10  weeks: HC- The New Indian Express

அதேபோல முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக 51.09 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாகக் கூறி உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 15.03. 2022 முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, 84 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு 34 லட்சம் ரூபாயை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கே.சி.வீரமணி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உருளும்  காங். மூத்த தலைவர் பெயர்! | Senior TN Congress leader name in KC Veeramani  DA Case - Tamil ...

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வருமானத்துக்கு அதிகமாக 27.78 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாகக் கூறி அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு செய்து கடந்த 16.09 2021 அன்று அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி, 34 லட்சம் ரொக்கம், 9 சொகுசுக் கார்கள் உள்பட சொத்து ஆவணங்கள், 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட் மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 1 கோடியே 80 லட்சம் அந்நிய செலாவனியாக முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

DVAC files corruption case against another AIADMK leader C Vijayabaskar,  raids 43 locations - Oneindia News

அடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துக்களை குவித்ததாகக் கூறி அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா அகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 18.10.2021 அன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 4,870 கிராம் தங்க நகைகள், 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

TN DVAC search Telangana granite factories linked to ex-minister

அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் 11 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி அவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 21.1.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி 2 கோடியே 87 லட்சம் ரூபாய் ரொக்கம், 6.63 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Senior AIADMK minister P Thangamani tests positive for coronavirus | The  News Minute

அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சம் ரூபாய் சொத்துக்கள் குவித்துள்ளதாகக் கூறி அவர் உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 15.12.2021 அன்று சோதனை நடத்தினர். சோதனையில் 2 கோடியே 16 லட்சம் பணம், 1.13 கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளான 7 அமைச்சர்களும் சேர்த்து மொத்தமாக 186.81 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல சோதனை நடைபெற்ற 6 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 6 கோடியே 70 லட்சம் பணம், 28.61 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடர்பாக மொத்தம் 7 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது 811 கோடி ரூபாய்க்கான டெண்டர் முறைகேடு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது 7வது முன்னாள் அ.தி.மு.க அமைச்சரான காமராஜுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத பணம், நகை எந்த அளவில் பறிமுதல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.