ஓபிஎஸ் பதவி வெறி பிடித்து அலைகிறார்; அவரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது- சிவி சண்முகம்

 
cv shanmugan

ஒ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்து அலைகிறார்; அவரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது- சிவி சண்முகம்கடந்த திங்கட்கிழமை அன்று பென்னகரத்தில் நடந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் நகலை இன்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் நேரில் சமர்ப்பித்தார். சுமார் 5000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

நான் இங்கேயே இரவு 12 மணிவரை நிற்கிறேன். வந்து மிரட்டி பாருங்கள்” -  சி.வி.சண்முகம் ஆவேசம் | nakkheeran

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், “அதிமுக செயற்குழு & பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு ஓரே தலைமையாக பொதுசெயலாளர் பதவி உருவாக்க திருத்தங்கள் செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் இன்று சமர்பிக்கபட்டுள்ளது.  கட்சியின் தற்காலிக பொதுசெயலாளராக ஏகமனதாக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார், 4 மாதங்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்ற முடிவுகள் குறித்தான ஆவணங்களும் இன்று சமர்பிக்கப்பட்டது. அதிமுகவில் 2,663 பொது குழு உறுப்பினர்கள் உள்ள நிலையில் 2,460 பொதுகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் 2,428 உறுப்பினர்கள் கட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு கையப்பமிட்டு ஆதரவு அளித்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்களும் இன்று தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றமாக இருக்கட்டும் உயர்நீதிமன்றமாக இருக்கட்டும் அவர்களின் உத்தரவில் ஒரு கட்சியில் உச்சப்பச்ச அதிகாரம் பொதுக்குழுவுக்கு  மட்டுமே உள்ளது. ஆதலால் நாங்கள் தலையிட ஒன்றும் இல்லை என்ற கூறி விட்டார்கள். பெரும்பான்மை அடிப்படையில் ஜனநாயகம் என்பது நீதிமன்றம் தெளிவு படுத்தி விட்டது. பொன்னையன் ஆடியோ தொடர்பாக அவரே மறுத்துள்ளார். இது என்  குரல் அல்ல என பொன்னையன் கூறியதை நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை அவர் ஆடியோவில் உள்ளது போல் அப்படியே சொல்லி இருந்தாலும் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. காரணம் அவரின் வயது காரணமாக அந்த விவகாரத்தில் தான் கருத்து கூற விரும்பவில்லை.

தான் கூட்டிய பொதுக்குழுவையே நடத்த கூடாது என போலீசில் ஒ.பன்னீர்செல்வம் புகார் அளித்துள்ளார். இது போன்ற நிகழ்வு எங்கும், எந்த கட்சியிலும் நடந்து இல்லை. ஒரு கட்சிக்குள் பிளவு வரலாம்! அடித்து கொள்ளலாம்! வெட்டி கொள்ளலாம்! பின்னர் சேர்ந்துகொள்ளலாம் . இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் அதிமுகவில் ஏற்கனவே நடந்துள்ளது என்பதால் இது சகஜம் தான். ஆனால் ஜானகி அம்மாவின் சொந்த சொத்து, 40 ஆண்டு காலம் எம்.ஜி.ஆர், ஜெயலாலிதாவினால் கட்டி காத்த மாளிகை எம்.ஜி.ஆர் மாளிகை. அடிப்படை உறுப்பினர் முதல் மத்திய அமைச்சர் என பலரை உருவாக்கிய கட்சி அதிமுக. இஸ்லாமியர்களுக்கு மெக்கா எப்படி புனித தலமோ, கிறிஸ்தவர்கள் ரோம் எப்படி புனித தளமோ, இந்துக்களுக்கு பழனி, திருப்பதி, திருச்செந்தூர் எப்படி புனித தலமோ அதே போல ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் எம்.ஜி.ஆர் மாளிகை ஒரு கோவில். அதனை காலால் எட்டி எட்டி உடைத்ததை எப்படி ஒ.பன்னீர்செல்வம் பார்த்தார். அவரையும் இந்த கட்சி தானே உருவாக்கியது. இந்த செயல் சொந்த தாயை வயிற்றில் அடிப்பதற்க்கு சமம். நாங்கள் அவர் மீது வைத்து இருந்த கொஞ்சம் மரியாதையும் இழந்து விட்டார். ஒ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்து அலைகிறார் என்பதால் அவரிடம் எந்த நியத்தையும் எதிர்பார்க்க முடியாது” என தெரிவித்தார்.