கட்சியை அழிக்க நினைக்கும் பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும்- வைத்திலிங்கம்

 
vaithilingam admk

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அவருடைய ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

OPS wants general council meet put off, team EPS digs heels in- The New  Indian Express

அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம், கு.பகிருஷ்ணன்,  ஜே சி டி பிரபாகர்,  மனோஜ் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

மேடையில் பேசிய வைத்திலிங்கம், “அதிமுகவும் சின்னமும் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் அனாதை ஆகி விடுவார். கட்சியில் தான் சேர காரணமாக இருந்த சேலம் கண்ணனுக்கும், தன்னை முதல்வராக்கிய சின்னம்மாவுக்கும், டிடிவி தினகரனுக்கும், ஆட்சி நிலைக்க துணை நின்ற ஓ.பி.எஸ்-க்கும் துரோகம் செய்து, துரோகத்தையே கொள்கையாக கொண்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு செய்த தியாகம் என்ன?, அவர் செய்தது நன்றி மறந்ததும், துரோகமும் மட்டுமே. கட்சியில் பொதுவாக காலில் விழுவார்கள் ஆனால் யாரும் தவழ்ந்து செல்ல மாட்டார்கள் ஆனால், தவழ்ந்து சென்று முதல்வரானார் பழனிசாமி. அப்படி முதல்வர் ஆக்கிய சசிகலா மற்றும் அதற்கு துணைநின்ற டிடிவி தினகரனுக்கும், 4 ஆண்டு ஆட்சிக்கு துணை நின்ற ஓபிஎஸ்-க்கும் துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.

அதிகாரத்தால் பணபலத்தால் எதையும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று அதிகார வெறி பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி.ஒற்றுமையாக கட்சியை கொண்டு செல்லலாம் என ஓபிஎஸ் சொல்கிறார் இதில் என்ன தவறு?  எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு இயக்கத்தை காப்போம், இயக்கமும் நமக்கு தான் இரட்டை இலையும் நமக்குதான். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் கிடையாது, தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் 2026 வரை இருப்பார்" எனக் கூறினார்.