எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை- ஓபிஎஸ்

 
ops

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். அப்போது ஈபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் என்பவரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.

AIADMK's internal dispute turns ugly leading to OPS' walk of shame - India  News

 

அதன்பின் நிகழ்ச்சியில் ஓபன்னீர்செல்வம், “தலைவர் எம்ஜிஆர் கட்சியை உருவாக்கிய போது அவர் விதித்த சட்ட விதிகளை போல் மற்ற கட்சிகளை சட்ட விதிகள் இல்லை. தலைமை பொறுப்பை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என சட்ட விதிகளை உருவாக்கியவர் எம்ஜிஆர். அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி. இதனை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார். அதற்கு ஆதாரமாக 2026 ஆண்டு வரை வெற்றி படிவம் வழங்கினார்கள். ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை. 


செயலாளர் பதவிக்கு குறைந்தது 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். எந்த ஒரு சர்வாதிகார எண்ணமும் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடியவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் இது போன்ற சட்ட விதிகளை எம்ஜிஆர் உருவாக்கினார். அதுதான் தற்போது நடைபெறக்கூடிய தர்மயுத்தம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதை தர்மமே வெல்லும்.” எனக் கூறினார்.