”எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமை பிரச்சினையை எழுப்பினார்”

 
eps

ஓபிஎஸ் ஆதரவு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் ஓபிஎஸ் இல்லம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

எது சரியோ, அதைப் பேசுவதற்கு பயப்பட மாட்டேன்!' -அரசு கொறடாவுக்கு எதிராகச்  சீறும் குன்னம் எம்.எல்.ஏ.| kunnam admk mla slams Government Chief Whip  Rajendran

அப்போது பேசிய அவர், “அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது, திடீரென்று ஒற்றை தலைமை வேணும் என்று சில இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக அந்த இரட்டையர்கள்  கட்சியில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒற்றை  தலைமை விவகாரம் குறித்து ஓபிஎஸ் இரட்டை தலைமைதான் வேண்டும் என கருத்தை தெரிவித்து விட்டார். அதுபோல இ.பி.எஸ்.தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

அவர் இதுவரை எந்தவித நிலைப்பாட்டையும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் ஒற்றை தலைமை குறித்து  பேசி முடிவெடுக்க வேண்டும். இரண்டாம் கட்டத் தலைவர்கள் அதை குறித்து பேச கூடாது. ஓபிஎஸ் வீட்டில் இருக்கும் நாங்களெல்லாம் இரட்டை தலைமை வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.  அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருக்கும் இருவர்தான் தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட வேண்டும் என்று இதுபோன்ற வேலைகளை பார்த்து வருகிறார்கள். முதலில் சசிகலாவை கட்சியை விட்டு அனுப்பினார்கள், பிறகு திட்டம் போட்டு டிடிவி தினகரனை கட்சியை விட்டு நீக்கி விட்டு, ஓபிஎஸ் உடன் இணைந்து நான்கு வருடம் ஆட்சியில் அமர்ந்தார் இபிஎஸ்.விரைவில் இபிஎஸ்க்கும் அந்த இருவரால் இதே நிலைமை ஏற்படும். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நாங்கள் ஒருதலைபட்சமாக செயல்படவில்லை நாங்கள் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு பேரும் தான் எங்கள் தலைவர்கள் என்று நினைக்கிறோம்” எனக் கூறினார்.