அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே முரண்பாடு உள்ளது - கடம்பூர் ராஜூ

 
“Can expect a good news soon” – Kadambur Raja hold out hope on re-opening of theatres

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை ரீதியாக பல்வேறு முரண்பாடுகள் உள்ளது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Tamil Nadu Minister Kadambur Raju gets anticipatory bail || Tamil Nadu  Minister Kadambur Raju gets anticipatory bail

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும்  கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜகவுடன் அதிமுக இணைந்திருந்தாலும் கொள்கை ரீதியாக பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. எங்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் முரண்பாடான கொள்கைகளை பாஜக கொண்டுள்ளது என்று அனுபவத்தின் வாயிலாக பொன்னையன் தெரிவித்துள்ளாரே தவிர அதிமுகவிற்கும் பாஜகவும் எதிரான கருத்தை அவர் தெரிவிக்கவில்லை.

அதிமுகவில் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு என்றுமே அதிகாரம் உண்டு. இது ஜனநாயக கட்சி திமுகவை போன்று குடும்ப கட்சி அல்ல. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் என்பதை இப்பொழுதே முன்னிலைப்படுத்தி வருகின்றனர். எனவே அது குடும்ப கட்சி. அதிமுகவில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை. அடிமட்டத்திலிருந்து வந்த தொண்டர்கள் இருவர் முதல்வரானது வரலாற்றிலேயே அதிமுகவில் நடந்துள்ளது. சசிகலாவை பாஜகவில் இணைய அழைப்பு விடுத்தது முன்னாள் பாஜக மாநில தலைவர். எனவே அதுகுறித்து அவர்களிடமே தான் கேட்க வேண்டும். இது அவர்கள் இருவருக்கும் உண்டான பிரச்சினை” என்றார்.