குஜராத்தில் பா.ஜ.க.வை காங்கிரஸ் எத்தனை முறை தோற்கடித்துள்ளது.. ஆம் ஆத்மி கிண்டல்..

 
ஆம் ஆத்மி

கடந்த 27 ஆண்டுகளில் குஜராத்தில் பா.ஜ.கவை காங்கிரஸ் எத்தனை முறை தோற்கடித்துள்ளது என்று ராகுல் காந்திக்கு ஆம் ஆத்மி பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியை பினாமியாக வைக்கப்படாமல் இருந்திருந்தால், காங்கிரஸை குறிவைக்க ஆம் ஆத்மி கட்சியை பயன்படுத்தாமல் இருந்திருந்தால், அங்கு பா.ஜ.க.வை காங்கிரஸ் தோற்கடித்து இருக்கும் என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

பா.ஜ.க.

கடந்த 27 ஆண்டுகளில் குஜராத்தில் பா.ஜ.க.வை காங்கிரஸ் எத்தனை முறை தோற்கடித்துள்ளது என்று ஆம் ஆத்மி கிண்டலாக கேள்வி கேட்டுள்ளது. ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா டிவிட்டரில், கடந்த 27 ஆண்டுகளில் குஜராத்தில் காங்கிரஸ் எப்படி பா.ஜ.க.வை பலமுறை தோற்கடித்தது என பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ்

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 2 கட்டங்களாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பா.ஜ.க. மொத்தம் 156 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.