மேடையில் டி.ஆர்.பாலுவின் செருப்பை தூக்கி சுமந்த தொண்டர்

 
tr

திமுக பொருளாளர் டி. ஆர். பாலுவின் செருப்பை தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்து கொடுத்திருக்கிறார்.  திமுக பொதுக்குழு கூட்ட மேடையில் நடந்த இந்த சம்பவம் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ‘இதுதான் திமுகவின் திராவிட மாடலா?’ என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.  இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிவித்ததும்,  கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மேடையில் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பெரியா,ர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

trb

 முன்னதாக தங்கள் காலில் இருந்த செருப்பை கழட்டி போட்டுவிட்டு சென்று மரியாதை செலுத்தினர்.  மரியாதை செலுத்திய பின்னர் செருப்பை அணிந்து கொண்டு மேடையில் சென்று அமர்ந்தனர்.  ஆனால் திமுக பொருளாளர் டி. ஆர். பாலு மட்டும்,   தான் அணிந்திருந்த செருப்பை அணிய  மறந்து இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார்.

 அப்போது இருக்கையில் அமர்ந்ததும் செருப்பு அணியாததை கவனித்த டி. ஆர். பாலு,  தனது செருப்பை எடுத்து வரும்படி தொண்டர் ஒருவரிடம் கூற,  அந்த தொண்டரும் தன் கையில் செருப்பை எடுத்து வந்து டி. ஆர். பாலுவின் கால் அருகில் வைத்தார்.  மேடைக்கு கீழிருந்த அனைவரையும் இது அதிர்ச்சி அடைய வைத்தது.

 இந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.  இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ‘இதுதான் திமுகவின் திராவிட மாடலா?’ என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.