மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

 
பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் செய்ததை மகாராஷ்டிராவில் ரானே மூலம் செய்ய முயற்சி செய்கிறது.. நவாப் மாலிக் குற்றச்சாட்டு

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது சகோதரி ஹசீனா மற்றும் தாவூத்தின் கூட்டாகளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தததில் மகாராஷ்டிரா சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரை கடந்த பிப்ரவரி 23ம் தேதியன்று அமலாக்கத்துறை கைது செய்தது. மாலிக் கைது செய்யப்பட்டதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகவும் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். 

அமலாக்கத்துறை

இந்த சூழ்நிலையில், நவாப் மாலிக்கின் காவல் நேற்று முடிவடைந்ததையடுத்து, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஆர்.என். ரோகடே முன்  அவரை அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது. மேலும் அமலாக்கத்துறை நவாப் மாலிக்கின் காவலை நீட்டிக்க கோரிக்கை விடுக்கவில்லை. இதனையடுத்து மும்பை சிறப்பு நீதிமன்றம் நவாப் மாலிக்கை 14 நாள் நீதிமன்ற வைக்க உத்தரவிட்டது. 

பா.ஜ.க.
சிறப்பு நீதிமன்றம் நவாப் மாலிக்கை 2 வாரங்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதால், அவர் தற்போதைக்கு வெளியே வர வாய்ப்பில்லை. மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.