குரங்கு கூட்டத்திற்குள் நாளை புதிய குரங்கு நுழையப்போகிறது - பாஜக கடும் தாக்கு

 
u

உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராவது குறித்து குரங்குகள் கூட்டத்தில் நாளை புதிய குரங்கு நுழைய இருக்கின்றது என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம்.

ud

 உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்கிறார்.  ஆளுநர் மாளிகையில் காலை ஒன்பது முப்பது மணிக்கு இந்த பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. இதுகுறித்து இன்று தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம் தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 செய்தியாளர்கள் இதுகுறித்து கருத்து சொல்லுங்க? என்றுகேட்டபோது,   தமிழ்நாடு என்கிற வாழைத்தோட்டத்திற்குள் குரங்குகள் கூட்டம் அமைச்சரவையில் இருக்கின்றது.  அந்த கூட்டத்திற்குள் நாளை புதிய குரங்கு நுழைய இருக்கின்றது.. இதுதான் என்னுடைய கருத்து என்று தெரிவித்துள்ளார் .

kpr

அவர் மேலும்,  உதயநிதி அமைச்சராவதை கடைகோடி திமுக தொண்டன் வரைக்கும் ஏற்றுக் கொண்டார்கள் என்றால்,  நாங்களும் ஏற்றுக்கொள்ள தயார்.  ஸ்டாலினை இப்படித்தான் கருணாநிதி கொண்டு வந்தார்.  அவரை இப்போது திமுகவினர் ஏற்றுக் கொள்ளவில்லையா?  ஏற்றுக்கொள்வது வேறு சகித்துக் கொள்வது வேறு என்று சொன்னவர், 

 இருக்கின்ற அமைச்சரவை சரியாக செயல்படவில்லையா?  செயல்படாத காரணத்தினால் தான் உதயநிதி அமைச்சராக்கப்படுகிறாரா? அப்படி என்றால் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை செயல்படாதவை அமைச்சரவை என்று பொருளாகி விடாதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்  கே. பி. ராமலிங்கம்.