தீபாவளி பண்டிகைக்கு முன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவியேற்பார்.. கட்சி வட்டாரங்கள் தகவல்

 
காங்கிரஸ்

தீபாவளி பண்டிகைக்கு முன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவியேற்பார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28ம்  தேதி நடைபெற உள்ளது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாடு சென்று இருப்பதால் இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என தகவல். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை உறுதி செய்வது குறித்து  ஆலோசனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21ம் தேதிக்குள் காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிரியங்கா, ராகுல்,சோனியா

ஆனால் தற்போது புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காலஅவகாசம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்படும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் நடத்த தற்போது சாதகமான காலம் இல்லை என்று கட்சி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், ராகுல் காந்தி மனம் மாறி மீண்டும் கட்சியை வழிநடத்த சம்மதிப்பார் என்று அந்த கட்சியினர் தீவிர நம்பிக்கையுடன் உள்ளனர். எப்படியேனும், தீபாவளி பண்டிக்கைக்கு முன்னதாக புதிய காங்கிரஸ் தலைவர் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

சோனியா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமையன்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அசோக் கெலாட்டுடன்  பேசியதாகவும், அப்போது அசோக் கெலாட்டிடம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியா காந்தி சொன்னதாகவும் ஊடகத்தில் செய்தி வெளியானது. ஆனால் இந்த தகவலை அசோக் கெலாட் மறுத்தார்.