நாளை நல்ல தீர்ப்பு வரும் - ஆதரவாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்

 
o

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த நிலையில், நாளை நல்ல தீர்ப்பு வரும் என்று  ஆதரவாளர்களிடம் நம்பிக்கை சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ்.

இன்று மாலையில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துள்ளார் ஓபிஎஸ்.   புகழேந்தி, கோவை செல்வராஜ் ,கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் கோலப்பன் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் வந்துள்ளனர்.

h

 அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் ஓட்டலுக்கு திரண்டு வந்துள்ளனர்.   500 பேர் வரை கூடி விட்டதால் அங்கே பரபரப்பாக இருந்திருக்கிறது.

 ஒவ்வொரு மாவட்டத்தினராக அழைத்து அவர்களுடன் பேசி விட்டு பின்னர் போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி இருக்கிறார்.   எடப்பாடி ஆதரவாளர்களாக இருந்தவர்கள் பலரும் மனம் மாறி தற்போது ஓபிஎஸ்சை சந்திக்க வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஓபிஎஸ்சை சந்தித்த நிர்வாகிகளிடம்,   நாளை தீர்ப்பு நமக்கு நல்லபடியா வரும்.. கவலைப்படாதீங்க என்று சிரித்துக் கொண்டே நம்பிக்கையுடன் சொல்லி இருக்கிறார்.  இரவு 9:45 மணிக்கு மேல் சந்திப்பை முடித்துவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே சென்று இருக்கிறார் ஓபிஎஸ்.

 அப்போதும்  சிரித்த முகத்துடன் நாளை நல்ல தீர்ப்பு வரும் என்று செய்தியாளர்களிடம் சொல்லி சென்றிருக்கிறார்.  
ஆளுநர் விருந்தை புறக்கணித்து பாஜக எதிர்ப்பை தொடங்கியிருக்கிறார் எடப்பாடி.  இந்த நிலையில் ஓபிஎஸ்சின் நம்பிக்கை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.