கழக தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி.. இதுதான் அண்ணாவின் வெற்றியா?

 
அன்ன்

 பேரறிஞர் அண்ணாவை முட்டாள் என்று சொன்ன தமிழ் இணைய கல்வி கழகத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் பத்ரி சேஷாத்திரி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். 

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்கள் , பிரச்சாரங்கள் செய்து வரும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகின்றன. 

இந்த நிலையில்,   என். வினோத்குமார் என்கிற பத்திரிகையாளர்,   மூன்று மாதங்களில் இந்தி கற்கலாம்.  அதற்கு மேல் அந்த மொழியில் கற்பதற்கு ஒன்றும் இல்லை என்று அண்ணாதுரை கூறியிருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.  


 கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரும்,  தமிழ் இணைய கல்வி கழகத்தின் ஆலோசனை குழு உறுப்பினருமான பத்ரி சேஷாத்திரி இந்த பதிவினை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து,   ’’இது அபத்தமான கருத்து.   இதை அண்ணாதுரை சொல்லி இருந்தால் அவரையும் முட்டாள் என்றே சொல்ல வேண்டும்’’ என பதிவிட்டிருந்தார். 

கடந்த அக்டோபர் அக்டோபர் 17ஆம் தேதி அன்று பதிவிட்டிருந்த இந்த கருத்துக்கு வலைத்தளம் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் உடனே அவரை தமிழக அரசு பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுகவில் கொந்தளித்து வந்தனர்.

 தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார்,  அண்ணாதுரையை விமர்சித்த பத்ரி சேசாத்திரியை தமிழ் இணைய கல்வி கழக ஆலோசனை குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் .  திமுகவினர் பலரும் இதையே வலியுறுத்தி வந்தனர் .  இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


உடனே செந்தில்குமார் எம்பி, ’’கழக தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி.. ’’என்று பதவி நீக்க உத்தரவை வெளியிட்டிருந்தார். அதற்கு பத்ரி,  '’இதுதான் அண்ணாவின் வெற்றியா?’’ என்று கேட்டிருந்தார்.  அதற்கு செந்தில்குமார் எம்பி,  ‘’ஆம்,இது எங்கள் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களின் வெற்றி’’என்று கூறியிருக்கிறார்.

பத்ரி சேஷாத்ரி,  நான்  சொன்ன கருத்துக்கு என்னை நீக்கி இருக்கிறார்கள் . குழுவில் இருந்து சேர்க்கவும் நீக்கவும் அரசுக்கு முழு உரிமை உண்டு. ஆனாலும் நான் சொன்ன கருத்து குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை . என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிரடி காட்டி இருக்கிறார்.