நடிகைகளையே வெச்சிக்கிற கம்பெனியா? திருச்சி சூர்யாவால் கடுப்பான காயத்ரி ரகுராம்

 
க்ய்

நடிகைகளையே வச்சிருக்கிற கம்பெனி என்று திருச்சி சூர்யா சிவா சொன்ன கருத்துக்கு காயத்ரி ரகுராம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். 

க்

 திமுக பேச்சாளர் சைதை சாதிக் அண்மையில் பாஜகவில் இருக்கும் நடிகைகள் குஷ்பூ, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை மிகவும் ஆபாசமாக பேசினார் என்று பாஜகவினர் கொந்தளித்தனர்.  இதனால் வழக்கும் தொடரப்பட்டதால் நீதிமன்றத்தில் சைதை சாதிக் மன்னிப்பு கேட்டார்.  இனிமேல் இதுபோல் பேச மாட்டேன் என்றும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

 இதற்கிடையில் பாஜகவில் இருக்கும் நிர்வாகிகள் திருச்சி சூர்யா -டெய்சி சரண் இருவரும்  மிக ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது .  இந்த விவகாரத்தில் தலையிட்ட காயத்ரி ரகுராம் கட்டம் கட்டி தூக்கி அடிக்க பட்டார்.

டெ

 ஆரம்பத்தில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராமுக்கும் மோதல் போக்கு இருந்து வந்திருக்கிறது.    சூர்யா சிவா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அதன் மூலமாக தலைமையை கடுமையாக காயத்ரி ரகுராம் விமர்சித்து இருந்ததால் அவர் அந்த பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டு,  அவருக்கு பதிலாக அந்தப் பதவியில் இசையமைப்பாளர் தினா அமர்த்தப்பட்டு இருக்கிறார்.

 இந்த நிலையில் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்.   இதற்கு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்து வருகிறார்.  அவர் கொடுத்த  பதிலடி கண்டு அதிர்ந்து போய் இருக்கும் காயத்ரி ரகுராம்,   மாற்றத்தை எப்படி எதிர்பார்க்கிறோம்?  என்று சூர்யா சிவாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.  நடிகைகளும் மனிதர்கள்தான். ஒரு தொழிலை தாக்குவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும்,  ஆக்கப்பூர்வமாக பேசுங்கள்.  சம்பந்தப்பட்ட நபரை, எதிர்க்கட்சியை நேரடியாக தாக்குங்கள். அவர்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தாக்குங்கள். ஆனால்,  தயவு செய்து  எந்தப் பெண்களையும் அதில்   சேர்க்கவோ அல்லது ஈடுபடுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.