தெலங்கானாவில் கழுதையை திருடியதாக காங்கிரஸ் தலைவர் கைது.. காங்கிரஸ் கண்டனம்

 
கழுதை

தெலங்கானாவில் கழுதையை திருடியதாக அம்மாநில தேசிய காங்கிரஸ் தலைவர் வெங்கட் பல்மூரை போலீசாரை கைது செய்துள்ளனர்.


தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், அவரது பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதியன்று அம்மாநிலம் முழுவதும் கழுதை முன்  கேட் வெட்டி கொண்டாட காங்கிரஸ் திட்டமிட்டது. அதன்படி அன்றைய தினம் பல இடங்களில் காங்கிரஸார் கழுதை முன் கேக் வெட்டினர். இந்நிலையில் தெலங்கானா தேசிய மாணவர் சங்கத்தின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைர்களில் ஒருவருமான வெங்கட் பல்மூரை போலீசார் கைது செய்தனர்.

கே.சந்திரசேகர் ராவ்

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர்கள் அளித்த புகாரில் அடிப்படையில், கழுதையை திருடிய குற்றத்துக்காக ஹூசூராபாத்தில் இருந்த வெங்கட் பல்மூரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் கே சந்திரசேகர் ராவுக்கு எதிராக நடத்திய கேக் வெட்டும் போராட்டத்தில் பயன்படுத்திய கழுதை, வெங்கட் பல்மூர் திருடி கொண்டு வந்த கழுதை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர்

தெலங்கானா காங்கிரஸ் விவகார பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் டிவிட்டரில், கே.சி.ஆர். காருவால் (கே சந்திரசேகர் ராவ்) நம்ப முடியவில்லை. அதிகாரம் உங்கள் தலையில் நுழையும் போது, மாணவர் தலைவர் மீது பொய் வழக்கு போடுவது எவ்வளவு பைத்தியக்காரத்தனம். தெலங்கானா முதல் ஹிட்லர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதை கண்டிக்க வார்த்தைகள் இல்லை என்று பதிவு செய்துள்ளார்.