’’மாமனார் முதுகில் குத்தும் துரோகம்.. தமிழகத்திலும் ஒரு சந்திரபாபு நாயுடு’’

 
ர

தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் இருந்தாலும் நிழல் முதல்வராக அவரது மருமகன் சபரீசன் தான் உள்ளார்.  திமுகவின் அதிகாரம் மையம் சபரீசன் தான் என்று பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில்,  தமிழகத்திலும் ஒரு சந்திரபாபு நாயுடு உருவாகும் நிலை இருக்கிறது என்று எச்சரித்துள்ளார் பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா.   ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான என்.டி. ராமராவுக்கு நம்பிக்கை துரோக துரோகம் செய்தவர்தான் சந்திரபாபு நாயுடு.  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக வேண்டும் என்கிற ஆசையில் மாமனார் என்டி ராமராவின் முதுகில் குத்தி விட்டு ஆட்சியை கைப்பற்றியவர் சந்திரபாபு நாயுடு என்று பிரதமர் மோடியே முன்பு விமர்சித்து இருக்கும் நிலையில்,  தற்போது எச். ராஜா அதே போல் மாமனாருக்கு நம்பிக்கை துரோகம் செய்து முதுகில் குத்தி விட்டு சபரீசன் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி விடுவார் என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார்.

ர

 என்டி ராமராவ் ஆட்சியை கவிழ்த்து விட்டு அவரது மகன் மருமகன் சந்திரபாபு நாயுடு  ஆட்சியை கைப்பற்றினார்.  ஆந்திர மாநிலத்தில் 1994 ஆம் ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று என்டி ராமராவ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.  அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  

 லட்சுமி சிவபாரதி என்பவர் என்டி ராமராவின் மனைவியாக ஆனதில் இருந்தே அவரது குடும்பத்தினருக்கு பிடிக்காமல் போனது.  இதனால் குடும்பத்தில் பெரும் பிரச்சனை வெடித்தது .  இந்த பிரச்சனை அரசியலிலும் வெடித்தது.  அரசியல் நடவடிக்கைகளிலும் சிவபாரதியின் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருந்தார். சட்டமன்ற தேர்தலில் என்டி ராமராவ் வெற்றிக்கு அவரின் புது மனைவி லட்சுமி சிவ பார்வதிதான் காரணம் என்ற பேச்சு எழுந்தது.   இது சந்திரபாபு நாயுடுவுக்கு ஆத்திரத்தை மூட்டியது. சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு எம்எல்ஏக்கள் ஏழு பேர் கட்சி விராத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சொல்லி என்டி ராமராவ் நீக்கிவிட்டார்.  இதன் பின்னணியில் சிவபாரதி இருப்பதாக சந்திரபாபு நாயுடு ஆத்திரம் கொண்டார்.  இதனால் கட்சிக்கும் வந்தது குடும்ப சண்டை. 

ண்ட்ர்

 சிவ பார்வதிக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவும் என்டி ராமராவ் மகன்கள் நடிகர் பாலகிருஷ்ணா,  ஹரிகிருஷ்ணன் ஆகியோர் போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டனர்.   24. 8 1995இல் இந்த மோதல் உச்சத்திற்கு சென்றது.   சந்திரபாபு நாயுடு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ரகசிய ஆலோசனை கூட்டம் போட,  கட்சியில் பிளவு ஏற்படாமல் தவிர்க்க என்டி ராமராவ் உடன் பேச்சு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.   அந்த ஆலோசனை கூட்டத்தினை அடுத்து சந்திரபாபு நாயுடுவும் பாலகிருஷ்ணாவும் என்டி ராமராவை சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.   நாலு மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.  இந்த சந்திப்பின்போது லட்சுமி சிவபார்வதியின் ஆதரவு  அமைச்சர்கள் 5 பேரை நீக்க வேண்டும் என்று எதிர்ப்பு கோஷ்டி சொன்னது.   ஆனால் இதை என்டி ராமராவ் ஏற்க மறுத்துவிட்டா.  இதை அடுத்து அன்று நள்ளிரவு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தெலுங்கு தேசம் கட்சியின் 150 எம்எல்ஏக்கள் கூடி தங்கள் அணி தலைவராக சந்திரபாபு நாயுடுவை தேர்ந்தெடுத்தார்கள்.  இதனால் தெலுங்கு தேசம் கட்சி இரண்டாக உடைந்தது.

ர

 மறுநாள் 25ஆம் தேதி அன்று இரு அணியினரும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  சந்திரபாபு நாயுடு ஆதரவாளர்களுடன் ஆளுநர் கிருஷ்ணா காந்தை சந்தித்து தெலுங்கு தேசம் கட்சி உடைந்ததை தெரிவித்தார் . இதை அடுத்து 30 நிமிடத்தில் சந்திரபாபு நாயுடு உட்பட 5 அமைச்சர்களை என்டி ராமராவ் கட்சியை விட்டு நீக்கினார்.  இதன் பின்னர் அமைச்சரவை கூட்டத்திற்கு ஆலோசனை நடத்தினார்.   20 அமைச்சர்களுடன் சென்று ஆளுநரை ராமராவ் சந்தித்த சட்டசபையை கலைக்கும்படி சொன்னார்.   சந்திரபாபு நாயுடு தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 153 பேரை ஆளுநர் முன்பு  நிறுத்தி ஆட்சி செய்து ஆட்சி அமைக்க தன்னை அழைக்கும் படி கேட்டுக் கொண்டார்.   தனது ஆதரவை நிருபிக்க சபாநாயகர் முன்பு எம்எல்ஏக்களை சந்திரபாபு நாயுடு ஆச்சரியப்படுத்தினார்.   சந்திரபாபு நாயுடு 163 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதை சபாநாயகர் உறுதி செய்தார்.  இதை எடுத்து ஆளுநருக்கு அறிக்கை அனுப்பினார்.

26 ஆம் தேதி ஆளுநரின் அழைப்புக்காக சந்திரபாபு நாயுடு காத்திருந்தார்.  அழைப்பு வரவில்லை இதை எடுத்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் கிருஷ்ண காந்துடன் ஆலோசனை நடத்தினர்.  மத்திய அரசுக்கும் அறிக்கையை அனுப்பினார்.   ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா,  பிரதமர் நரசிம்மராவ் ஆகியோருடன் என்டி ராமராவ் தொலைபேசியில் பேசி நிலைமையை விளக்கினார் . 

ச்ர்

இந்த நிலையில் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் 221 பேரில் 174 எம்எல்ஏக்கள் சந்திரபாபு நாயுடு ஆதரவளிப்பதாக அறிவிக்கப்பட்டது.   இதை அடுத்து 27ஆம் தேதி அன்று முதல்வர் என்டி ராமராவ் ஆளுநருக்கு  ஒரு கடிதம் அனுப்பினார்.  நீங்கள் எம்எல்ஏக்கள் ஆதரவை இழந்து விட்டதாக மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது . எதிரணி கூறியபடி அவர்களுக்கு 163 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக சபாநாயகர் உறுதி செய்திருக்கிறார் என்ற தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆந்திர அரசியலில் ஏற்பட்ட நெருக்கடிக்கு சமரசம் செய்ய ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்று ராமராவை சந்தித்து பேசினார்.  பின்னர் சந்திரபாபு நாயுடுவையும் அவரது ஆதரவாளர்களையும் சந்தித்தார் .  சந்திரபாபு கடைசியில் சந்திரபாபு நாயுடுவுக்கே ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார் .  என்டி ராமராவ் முதலமைச்சர் ஆனதும் திருப்பதி தேவஸ்தான கமிட்டி உறுப்பினராக நடிகர் ரஜினிகாந்த்தை  நியமித்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

1 .9 .1995 இல் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றார் . அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு வயது 45.  அவர் ஆந்திராவின்  18 ஆவது முதல்வராக ஆனார்.

ஹ்

மாமனாருக்கு பின்னாள் நின்று  பின்னர் முகுதுகில் குத்திவிட்டு  கட்சியையும் ஆட்சியையும் பிடித்த சந்திரபாபு நாயுடு போல் தமிழகத்திலும் ஏற்பட்டும் என்கிறார் எச்.ராஜா.

விருதுநகர் மாவட்ட மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்த எச். ராஜா அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  ’’ஆந்திராவில் என். டி. ஆர் முதல்வராக இருந்தபோது அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றினார்.  அதே போல் தமிழகத்தில் ஒரு சந்திரபாபு நாயுடு உருவாகும் நிலை இருக்கிறது.  அரசு நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பதை முதல்வர் மு. க. ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று கேட்டிருக்கிறார்.