தமிழகத்தில் 662 வாக்குகள் பதிவு -49 பேர் ஆப்சென்ட் : காங்., தலைவர் தேர்தல்

 
c

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நாடு முழுவதும் நடந்தது . இதில் தமிழ்நாட்டில் 662 வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.  தமிழ்நாட்டில் 711 பேர் வாக்களிக்க தகுதியான நிலையில் 662 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன.   49 பேர் ஆப்சென்ட் ஆகி இருக்கின்றனர். 

 காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே - சசிதரூர் இரண்டு பேரும் போட்டியிட்டனர்.  நேற்று காலையில் 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது .  அனைத்து மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் வாக்களிக்க தகுதியுடைய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வாக்களித்தனர்.

co

 டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி , பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

 தமிழ்நாட்டில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் வாக்கு பதிவு நடந்தது.  காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை நாலு மணி உடன் நிறைவடைந்தது.  தமிழ்நாட்டில் மொத்தம்  711 பேர் வாக்களிக்க தகுதியான நிலையில் இருந்தனர்.  ஆனால் 662 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா தெரிவித்திருக்கிறார். 711 பேரில்  49 பேர் ஆப்சன்ட் ஆகி இருக்கின்றன.

 வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப் பட்டியல்கள் சீல் இடப்பட்டு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன.