ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்! அதனால்தான் சத்தியமூர்த்தி பவனில் ஒரு காக்காய் குருவி கூட இல்லை! உதயகுமார் பரபரப்பு

 
rv

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து உள்ளார்கள் திமுகவினர்.   இந்த வெற்றி விலை கொடுத்து வாங்கப்பட்டது.   இது காங்கிரசுக்கு நிரந்தரம் இல்லை என்று கூறியிருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி .உதயகுமார் . 

முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர். பி. உதயகுமார் மதுரை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   ஈரோடு இடைத்தேர்தல்  குறித்து விளக்கினார்.   2011 இல் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார்.  அப்போது அமைச்சராக இருந்த மரியம் பிச்சை மரணம் அடைந்தார்.  திருச்சி மேற்கு தொகுதியில் அப்போது நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதியும் திமுக சார்பில் கே. என். நேருவும் போட்டியிட்டார்கள்.  அந்த தேர்தலில் நேரு தோல்வியடைந்தார் .  அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டில் சங்கரன்கோவிலில் அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி மரணம் அடைந்தார்.   அங்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றார்.   திமுக டெபாசிட் இழந்தது.

d

 புதுக்கோட்டை ,ஏற்காடு ,ஆலத்தூர் , ஆர் .கே. நகர் , திருப்பரங்குன்றம் , அரவக்குறிச்சி,  தஞ்சாவூர் தொகுதிகளுக்கும்  இடைத்தேர்தல் நடந்தது.  இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டில் ஒன்பது தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.  2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரைக்கும் இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடந்தது.   21 தொகுதிகளில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது திமுக இரண்டு இடங்களில் தோல்வி அடைந்தது.  மூன்று தொகுதிகளில் திமுக டெபாசிட் இழந்தது.  

 இடைத்தேர்தல் என்பதை ஒரு பொதுவான அளவுகோலாக எப்போதும் தமிழக வரலாற்றில் பார்ப்பதில்லை.  இப்போது நடைபெற்றது ஒரு தேர்தலே அல்ல.  இது ஜனநாயக படுகொலை என்பது நாடு அறிந்த உண்மை .  திமுக ஆட்சி மீது மக்களுக்கு மத்தியில் மக்கள் மத்தியில் அதிருப்தி கோபம் இருக்கிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு,  பால் விலை உயர்வு , அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இதையெல்லாம் மக்களிடத்திலே சொல்லி எடப்பாடியார் பிரச்சாரம் செய்தார். 

e

 திமுக அமைச்சர்கள் 30 பேரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தினந்தோறும் கோட்டை பக்கமே போகாமல் இருந்தனர்.  என்பது சதவிகித வாக்காளர்களை மூளைச்சலவை செய்து அடைத்து வைத்தார்கள்.   ஈரோடு கிழக்கு தொகுதியில் 40 ஆயிரம் வாக்காளர்கள் இல்லை.  ஆனால் அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது. 8,500 க்கும் மேற்பட்டோர் இறந்தவர்கள் . அவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படவே இல்லை.  இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் திமுக செய்த முறைகேடுகள் குறித்து பத்துக்கும் மேற்பட்ட புகார்களை கொடுத்து இருக்கிறோம்.  ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. வாக்குப்பதிவு அன்றும் கூட கடைசி நேரத்தில் 5 மணிக்கு பிறகும் 6 மணிக்கு பிறகும் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு அதிகமாக இருந்தது.  இதெல்லாம் திமுகவின் திட்டமிட்ட சதி தான்.

 எடப்பாடி யார் சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்டார்.  ஆனால் திமுகவின் ஒவ்வொரு அமைச்சரும் தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்வதற்காக மக்களுக்கு பணத்தை வாரி வாரி இறைத்தார்கள்.  குக்கர், கொலுசு , பணம் கொடுத்து,  சிக்கன் கொடுத்து, சேலை கொடுத்து வேஷ்டி கொடுத்து என்று ஏறத்தாழ ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவழித்து உள்ளார்கள். 

u

  இது ஸ்டாலினுக்கு உளவுத்துறை மூலம் தெரியும்.  இந்த வெற்றி கொண்டாடுகிற வெற்றி இல்லை . அதனால் தான் சத்தியமூர்த்தி பவனில் ஒரு காக்காய் குருவி குஞ்சு கூட இல்லை.  ஏனென்றால் இது விலை கொடுத்து வாங்கிய வெற்றி.  காங்கிரசுக்கு இது நிரந்தரம் இல்லை . விலை கொடுத்து வாக்குகளை வாங்க முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.   இன்றைக்கு நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் இரட்டை சிலை சின்னம் வென்றிருக்கும்.

தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை திருமங்கலம் ஃபார்முலா தான் தமிழ்நாடு முழுவதும் உலகம் முழுவதும் பேசப்பட்டது . இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி பார்முலாவில் மக்களை பட்டியிலடைத்து வைத்து மூளைச்சலவை செய்தது திமுக.  இந்த ஆட்சியின் மீது மக்கள் விரோத அரசியல் மீது மன்னராட்சி மீது மக்களுக்கு இருந்த கடும் கோபத்தை தணிப்பதற்காக ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவழித்தார்கள்.  அதனால்தான் சத்தியமூர்த்தி அவனில் ஒரு காக்காய் குருவி கூட இல்லை. ஏனென்றால் இது விலை கொடுத்து வாங்கிய வெற்றி. காங்கிரசுக்கு இது நிரந்தரம் இல்லை. ஒரு ஓட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் காங்கிரஸ் கட்சியால் கொடுக்க முடியாது . காங்கிரஸ் கட்சியின் வெற்றியை சத்யமூர்த்தி பவனில் கொண்டாடுவதற்கு இளங்கோவன் தயாராக இல்லை.  இதுதான் உண்மை நிலவரம்.  நியாயமான முறையில் தேர்தல் நடந்திருந்தால் அதிமுக அம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.