திமுகவில் இருந்து 50 பேர் திருடர்கள் போல் வந்தார்கள் - ஜெயக்குமார் தாக்கு

 
ja

திமுகவில் இருந்து 50 பேர் திருடர்கள்  போல் வந்து சென்றார்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார். சுனாமி நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த திமுகவினரை அவர் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.

 சுனாமி 18 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் சுனாமி நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் முன்னாள் அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.   பின்னர் அவர் லாஞ்ச் படகு மூலம் நடுக்கடலுக்குள் சென்று பால் ஊற்றி,  மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.  சிறிது தூரம் அவரே லாஞ்சை ஓட்டிச் சென்றார். 

jaya

 அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,   இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் நன்மை செய்யவில்லை.  மாண்டஸ் புயல் கரையை கடந்து பின்பும் கூட மீனவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை.  பத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை மீனவர்களிடம் கேட்டு அவர்களை அழைக்களிக்கிறார்கள்.

 புயல் கரையை கடந்து விட்ட பின்னர் மகாபலிபுரத்தை முதலமைச்சர் ஆய்வு செய்யவில்லை.  நாங்கள் தான் ஆய்வு செய்தோம்.  மீனவர்கள் அதிமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள் என்று தெரிந்து அவர்களை வஞ்சிக்கிறது இந்த விடியா அரசு என்று சொன்னவர்,   திமுகவின் சார்பில் இன்றைக்கு காசிமேட்டில் சுனாமி தின அஞ்சலிக்கு 50 பேர் திருடர்கள் போல் தான் வந்தார்கள் என்று குறிப்பிட்டார் .

அவர் மேலும்,  எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொங்கல் தொகுப்பில் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.  ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும்போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுக்கிறார்.   பொங்கல் தொகுப்பு பற்றி மூத்த அமைச்சர் எ.வ. வேலுவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.   நிர்வாக திறமையற்ற அரசு நடைபெறுகிறது என்பதற்கு இந்த ஒப்புதல் வாக்கு மூலமே உதாரணம் . 

அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது என்ற ஜெயக்குமார்,   நிர்வாக திறமை இல்லாத அரசு என ஒப்புதல் வாக்குமூலமாக அமைச்சர் வேலு பேட்டியை பார்க்கிறேன் என்றவர்,

 என்னுடைய சொத்து விவரம் முழுவதும் இணையதளத்தில் இருக்கிறது.  யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் .  வெறும் 299 ரூபாய் பாட்டா செருப்பை அணிந்துதான் நான் லண்டனுக்கே சென்று வந்திருக்கிறேன்.  ஆனால் ஸ்டாலின் போல விலை உயர்ந்தவை அணியவில்லை என்று ஸ்டாலினின் ஆடம்பரத்தை விமர்சித்தார்.