சங்கி கரப்பான்களில் 5 சிக்கின.. பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்டு வருகிறது - டிஆர்பி. ராஜா

 
bj

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதை, சங்கி கரப்பான்களில் 5 சிக்கியிருக்கின்றன. பூச்சிக்கொல்லி அடிக்கபட்டு வருகிறது என்று ஆத்திரத்துடன் சொல்லி இருக்கிறார் டிஆர்பி .ராஜா.

trp

ரஜ்ஜவுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் லட்சுமணன் உட்பட 4 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  லட்சுமணன் உடல் தனி விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.  மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு தமிழக நிதி அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டபோது அவரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது.   பெண் ஒருவர் செருப்பை வீசியுள்ளார்.  

மதுரை விமான நிலைய  நுழைவுவாயில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

tr

 ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பின்னரே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொன்னதால் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.   இந்த ஆத்திரத்தில் தான் நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசப்பட்டு இருக்கிறது.   

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை அவனியாபுரம் போலீசா கைது செய்துள்ளன.  கைதானவர்களில் மூன்று பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதும்,  இரண்டு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. 

இதுகுறித்து திமுக மன்னார்குடி எம்.எல்.ஏவும்,  திமுக மூத்த தலைவர் டிஆர்பாலுவின் மகனுமான டிஆர்பி ராஜா,  ‘’தேசியக்கொடி மீது செருப்பு வீசிய சங்கி கரப்பான்களில் 5 சிக்கியிருகின்றன. பூச்சிக்கொல்லி அடிக்கபட்டுவருகிறது என்று தகவல்கள் வருகின்றன. மீதம் உள்ளவைகளும் விரைவில் சட்டப்படி ஜெயில் கம்பிகளுக்கிடையில் நசுக்கப்படும் என்று நம்புவோம்’’என்கிறார்.