#BREAKING அதிர்ச்சியில் இபிஎஸ்- தவெகவில் இணையும் மேலும் 5 அதிமுக எம்எல்ஏக்கள்?

 
ச்

சமீபத்தில், அதிமுகவின் முக்கிய முகங்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், டி. ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அனுபவமிக்க இந்த நிர்வாகிகளுக்கு, தவெக தலைமை உடனடியாகத் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகளை வழங்கி கவுரவித்தது.

தவெகவில் இணைந்த இந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனத் தலைமை உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை முறையாக ராஜினாமா செய்த பிறகே கட்சியில் இணைந்ததால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழல், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தைரியத்தை அளித்துள்ளது.

தவெகவின் இந்தத் தீவிர விரிவாக்க நடவடிக்கை வெறும் அரசியல் காய்நகர்த்தல் மட்டுமல்ல.. சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மையைப் பலப்படுத்தும் நோக்கம் கொண்டது. ஆளும் தவெக அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கூட்டணிக் கட்சியான இடதுசாரிகள், அரசின் சில கொள்கை முடிவுகள் மற்றும் நிர்வாக ரீதியான செயல்பாடுகளில் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை அவர்கள் திரும்பப் பெறக்கூடும் என்ற சூழல் நிலவுவதால், ஆட்சிப் பலத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தவெக தலைமை உள்ளது. எனவே கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளிலிருந்து விடுபடவும், தனித்து நின்று பெரும்பான்மையை நிலைநாட்டவும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் நேரடி வெற்றியைப் பதிவு செய்வது தவெகவிற்கு அவசியமாகிறது. சட்டமன்றத்தில் தங்களின் சொந்த பலத்தை அதிகரிப்பது மட்டுமே ஆட்சிக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும் எனத் தலைமை கருதுகிறது.

இதன் தொடர்ச்சியாகவே, தற்போது மேலும் 5 அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 2 பேர் தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே, களத்தில் தவெக தொண்டர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளைத் தொடங்க ஏதுவாக, தாமதிக்காமல் இவர்கள் உடனே தவெகவில் இணையும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளதாம். வரும் சட்டமன்றக் கூட்டத்தொடர் செப். 8ம் தேதி நிறைவடைந்தவுடன், இந்த 5 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் இணைப்பு முறைப்படி நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.