கடைசி நேர துண்டு சீட்டுகள்; 3 நாளாக கடுகடுப்பில் ஸ்டாலின்

 

கடைசி நேர துண்டு சீட்டுகள்; 3 நாளாக கடுகடுப்பில் ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியதோடு வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டு தேர்தல் களத்தில் ஜெட் வேகம் காட்டி வருகிறது அதிமுக. ஆனால், திமுகவோ இன்னமும் தொகுதிப்பங்கீட்டில் ஒரு முடிவினை எட்டாமல், வேட்பாளர் பட்டியலையும் அறிவிக்காமல் திணறிக்கொண்டிருக்கிறது.

கடைசி நேர துண்டு சீட்டுகள்; 3 நாளாக கடுகடுப்பில் ஸ்டாலின்

பெரும் போராட்டத்திற்கு பின்னர்தான் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, மதிமுக, சிபிஎம், காங்கிரஸ், கொமதேக கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்தது திமுக. ஆனாலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது இன்னமும் உறுதி செய்யப்படாமல் இருக்கின்றன.

ஐபேக் கொடுத்த ஆலோசனைப்படி, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, தேறாத தொகுதிகளை கூட்டணியினருக்கு தள்ளிவிட பார்த்திருக்கிறார் ஸ்டாலின். இதற்காகவா கூட்டணி வைத்தோமென்று அவர்கள் நொந்துகொண்டு, கேட்ட சீட்டுதான் தரவில்லை; கேட்ட இடங்களாவது கொடுங்க என்று அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.

கடைசி நேர துண்டு சீட்டுகள்; 3 நாளாக கடுகடுப்பில் ஸ்டாலின்

இந்த குழப்பத்தினால்தான் 10ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலினே அறிவித்தும் கூட, இன்னமும் வெளியிடப்படாமல் இருக்கின்றன. இன்றைக்கு மாலை வெளியிட்டப்படும் என்று வரும் தகவல் கூட உறுதி இல்லை என்கிறார்கள்.

கூட்டணி கட்சியினரால் ஒரு பக்கம் மண்டை காய்ந்து போயிருக்கும் ஸ்டாலின், கட்சியின் சீனியர்களாலும் ரொப்பவே அப்செட் ஆகியிருக்கிறாராம். தொகுதியை மாத்து, அவருக்கு கொடு, இவருக்கு கொக்காதே என்று தீக்குளிப்பு வரைக்கும் போய் உ.பி.க்கள் டென்சன் படுத்துவது பத்தாது என்று, மூத்த நிர்வாகிகளும், குடும்ப உறுப்பினர்கள் சிலரும் துண்டு சீட்டுக்குகள் அனுப்பி இருப்பது ஸ்டாலினை ரொம்பவே கடுப்பேத்தி இருக்கிறது. அந்த துண்டு சீட்டுகளை அலட்சியப்படுத்தினாலும் உள்ளடி வேலை பார்த்து காலிசெய்துவிடுவார்கள் என்று நினைக்கும் ஸ்டாலின்,

கடைசி நேர துண்டு சீட்டுகள்; 3 நாளாக கடுகடுப்பில் ஸ்டாலின்

வேட்பாளர் பட்டியல் ரெடியானவுடன் குலதெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்துவிட்டுத்தான் வெளியிட வேண்டும் துர்கா வேறு தன் பங்குக்கு ஒரு கட்டை போட்டிருகிறாராம்.

அதனால், இன்றைக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.