300 பேர் கூண்டோடு ராஜினாமா -தமிழக காங்கிரஸில் பரபரப்பு

 
ச்

 கே. எஸ். அழகிரி ஆதரவாளர் ரஞ்சன் குமார் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்வப் பெருந்தகை ஆதரவாளர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் தமிழக காங்கிரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 தமிழக காங்கிரஸில் எஸ்.சி. பிரிவு தலைவராக செல்வபெருந்தகை இருந்து வந்தார்.  கடந்த எட்டு ஆண்டுகளாக பொறுப்பில் இருந்து வந்த அவரின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது.  

க்ச்

இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே. எஸ் அழகிரி,  தனது  ஆதரவாளர் ரஞ்சித் குமாரை தமிழக காங்கிரஸின் எஸ். சி. பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் .    ரஞ்சன் குமாரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநில எஸ். சி. பிரிவில் பொறுப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்களது பதவியை கூண்டோடு ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

செ

 அந்த பிரிவின் துணைத் தலைவர்கள்,  மாநில ஒருங்கிணைப்பாளர்கள் , மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர்கள் என்று 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.   இது குறித்து புகார் கடிதம் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் எஸ்சி  பிரிவில் கடந்த எட்டு ஆண்டுகளாக உழைத்தவர்களை பதவிக்கு அமர்த்தாமல் மாநில தலைவருக்கு பரிந்துரைக்காமல் தங்களை புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.