ஜெனரேஷன் ஜெனரேஷனாக பிச்சை எடுக்கும் 3 பேர் - அண்ணாமலை விளாசல்

ஒரு அரசியல்வாதியாக இதை பேசுவதற்கு எனக்கு பிடிக்கவில்லை; இருந்தாலும் இதை பேச வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து பாஜக மீதும், மாநில தலைவர் அண்ணாமலை மீதும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருவது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
’’அதெல்லாம் கடந்து வந்தாச்சு. தினகரன் பேப்பர், முரசொலி பேப்பர் எல்லாம் டாய்லெட் பேப்பர் என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் எழுதுறதுக்கு எல்லாம் பதில் எழுதி நம்முடைய தரத்தை தாழ்த்தக்கூடாது என்பதற்காகஅவர்களுக்கு பதில் அளிப்பதெல்லாம் பல காலத்துக்கு முன்னாடி விட்டாச்சு. ஆனா ஆர்எஸ் பாரதி அவர்கள் பார்த்தீங்கன்னா.. எனக்கு ஒரு அரசியல்வாதியாக இதை பேசுவதற்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் இதை பேச வேண்டும்.
அதாவது அவர்களுக்கெல்லாம் இருக்கக்கூடிய ஒரே தகுதி அறிவாலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பது. அங்கே உட்கார்ந்தோம்னா கோபாலபுரத்து குடும்ப பிச்சை போடுவாங்க... அதற்காக காலம் காலமாக ஜெனரேஷன் ஜெனரேஷனாக ஆர். எஸ். பாரதியை போன்ற சில மூணு நாலு பேர் அறிவாலய வாசல்ல பிச்சை எடுப்பதற்காக அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள் . அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்தினால் அது ஊடக நண்பர்களுக்கும் சரியாக இருக்காது. நான் சார்ந்திருக்க கூடிய கட்சிக்கும் அது சரியாக இருக்காது’’என்று காட்டமாக பதில் அளித்துள்ளார் அண்ணாமலை.
கோபாலபுரத்து குடும்பம் பிச்சை போடுவார்கள் என்று அறிவாலய வாசலில் அமர்ந்து RSபாரதி போன்ற சிலர் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 27, 2022
எனவே அதையே தகுதியாக கொண்டவர்களுக்கு பதில் சொல்லி"என் தரத்தை தாழ்த்திக் கொள்ள முடியாது"
மாநில தலைவர்
திரு. @annamalai_k pic.twitter.com/WWex0RBbjS