சிக்கப்போகும் 3 திமுக எம்பிக்கள்! பல ரகசிய ஆவணங்களை அமித்ஷாவிடம் கொடுத்த அதிமுக

 
அம்

முக்கிய ஆதாரங்களுடன் கூடிய பல ரகசிய ஆவணங்களை அமித்ஷாவிடம் ஒப்படைத்து இருக்கிறது அதிமுக.  அதன் அடிப்படையில் திமுகவின் மூன்று எம்பிக்கள் மீது விரைவில் வழக்கு தொடர முடிவு எடுத்து இருக்கிறார் அமித்ஷா.  இந்த மூன்று பேரும் மத்திய அமைச்சர்களாக முன்பு இருந்தவர்கள் என்பதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் சலசலப்பும் நிலவுகின்றது.

அஒ

 அதிமுகவின் மூத்த தலைவரும் , தற்போதைய அதிமுகவின் ராஜ்ய சபா தலைவரும் , முன்னாள் துணை சபாநாயகருமானவர் தம்பிதுரை.  இவர் டெல்லியில் முகாமிட்டு திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

 டெல்லியில் முகாமிட்டிருக்கும் தம்பிதுரை,   பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து திமுக ஆட்சியில் தமிழகத்தில் எப்படியெல்லாம் ஊழல் செய்கிறார்கள் என்பது பற்றி ஆதாரங்களுடன் புகார் பட்டியலை சமர்ப்பித்திருக்கிறார்.  இதில் மூன்று திமுக எம்பிக்களின் பெயர் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது என்கிறார்கள்.  அந்த மூன்று திமுக எம்பிக்களும் முன்பு மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால் தான் திமுக வட்டாரம் ரொம்பவே அதிர்ந்து போய் இருக்கிறது என்கிறார்கள் .

ட்

ஊழல் பட்டியலை பெற்றுக் கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா,  கவலைப்பட வேண்டாம்.. இவர்கள் மீது விரைவில் வழக்கு தொடரலாம் என்று தம்பிதுரை இடம் உறுதி அளித்திருக்கிறாராம். 

 அமித்ஷாவிடம் கொடுத்த அந்த ஆவணங்கள் மட்டுமல்லாது மேலும்  திமுக அமைச்சர்கள்,  எம்பிக்கள் குறித்த பல  ரகசிய ஆவணங்களை வைத்திருக்கிறாராம் தம்பிதுரை.   நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த ரகசிய  ஆவணங்கள் வெளியாகும் போது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பும் என்கிறார்கள்.