வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கிய பதவி

 

வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கிய பதவி

மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை மற்றும் தஞ்சாவூர் துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தனர். அதனால் இவ்விருவரும் வகித்து வந்த பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கட்சியில் பலமாக இருக்கிறது.

வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கிய பதவி

கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றி, மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் புலவர் ஆகியோர் இப்பதவியை பெற கடும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல். ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் வைகோவின் மகன் வையாபுரிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வைகோவின் உடல்நலம் கருதி அவர்கள் இந்த விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். வைகோ அரசியலிலிருந்து ஓய்வு பெறுகின்ற நேரத்தில் அவர் வகித்து வரும் பொதுச் செயலாளர் பதவியை துரை வையாபுரி ஏற்க வேண்டும் என்றும், அதற்கு முன்னோட்டமாகத்தான் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வைத்து விட வேண்டும் என்றும் கட்சியின் நிர்வாகிகள் சிலர் விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம்.

வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கிய பதவி

அதனால்தான் அரசியலில் இருந்து கொஞ்சம் விலகி இருந்த துரை வையாபுரியை நடந்த சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்ய வைத்துள்ளனர். அதன் பின்னரும் மதிமுகவின் பேனர் , போஸ்டர்களில் எல்லாம் வைகோவுக்கு இணையாக வையாபுரியின் படமும் இடம்பெற்று வருகின்றன.

வைகோ பங்கேற்க இயலாத கட்சி நிகழ்வுகளி, கட்சியினரின் விழாக்களில் பங்கேற்று வருகிறார் துரை வையாபுரி. அரசியலில் நெருக்கமாக இருந்து மதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் செய்யப்பட்டு வருவதாக கட்சியினர் சிலர் தெரிவித்துள்ளதாக தகவல்.