’’ஆளும்கட்சிக்கு பிடிக்காத வசனம் இதுதான்’’

 

’’ஆளும்கட்சிக்கு பிடிக்காத வசனம் இதுதான்’’

இன்று தொடங்கிய 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

’’ஆளும்கட்சிக்கு பிடிக்காத வசனம் இதுதான்’’

தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ’’தொலைநோக்கு பார்வை இல்லாத ஆளுனர் உரை. அரசின் நோக்கம் என்ன என்பதில் தெளிவே இல்லை. வளர்ச்சி பற்றி ஒரு வார்த்த்கை கூட இல்லை.’’என்று குறிப்பிடுகிறார்.

மாநில அரசின் உரிமைகள் மீறப்பட்டால் கடுமையாக எதிர்ப்போம் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் உள்ளதை சொல்லி, ‘’டெல்லியில் சரணாகதி..
சென்னையில் மார்தட்டல்.. திமுக ஸ்டைலே தனிதான்’’ என்கிறார்.

’’ஆளும்கட்சிக்கு பிடிக்காத வசனம் இதுதான்’’

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைகுழு நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, ’’ஆங்கிலேயர்களும் ஆரியர்களுமா? திராவிடத்திற்கு புத்தி சொல்வது?’’என்று கேட்கிறார். மேலும், ’’இது புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை. பொருளாதார நிலையை மேம்படுத்த மக்கள் நலன், வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துதலே சரி.. ஆலோசனை என்ற பெயரில் Western Economist க்கு வழங்கும் Fees க்கு ஒரு திட்டமே செயல்படுத்திவிடலாமே. என்ன தான் வேஷம் போட்டாலும் நரி. பரி ஆகாதே’’ என்கிறார்.

’’ஆளும்கட்சிக்கு பிடிக்காத வசனம் இதுதான்’’

எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால் ஊழலை ஒழிக்கலாம் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டிருந்ததை சொல்லி, ’’ஆளுநர் உரையில் ஆளும்கட்சிக்கு பிடிக்காத வசனம்.’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.