’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த தேசத்தை வழிநடத்தவல்ல தகுதியான தலைவனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று இன்று பிறந்தநாள் கானும் ராகுல்காந்திக்கு கரூ காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வாழ்த்துக்கள்தெரிவித்துள்ளார்.

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

அகில இந்திய காங்கிரசின் மேனாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அளவில் சனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க, சனாதன சக்திகளை விரட்டியடிக்க, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க ராகுலின் தலைமை இன்றியமையாததாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல் ராகுல்காந்தி அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’