இன்றைக்காவது அதை வெளியிடுவாரா ராமதாஸ்?

 

இன்றைக்காவது அதை வெளியிடுவாரா ராமதாஸ்?

ஓரிரு நாட்களில் என்று ராமதாஸ் சொல்லி இருந்ததால் அவர் இன்றைக்கு அந்த விவரங்களை வெளியிடுவார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

இன்றைக்காவது அதை வெளியிடுவாரா ராமதாஸ்?

தமிழக சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6 தேதி அன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. வரும் மே-2ம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. இந்நிலையில், நேற்று முன் தினம் பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’நியாயமான, சுதந்திரமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்காக மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் அளித்த 40 பரிந்துரைகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இது குறித்து விரிவான, விவரங்கள் ஓரிரு நாட்களில்.’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடைபெறவில்லை என்று அவர் சொல்ல வருகிறாரா? என்ற கேள்வி எழுந்தது. விவரங்களை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப்போட்டு ஏன் சஸ்பென்ஸ் வைக்கிறார் என்றும் கேள்வி எழுந்தது.

ராமதாஸ் சொன்னபடியே இன்றைக்கு அல்லது நாளைக்கு அந்த விபரங்களை வெளியிடுவாரா என்ற பேச்சு எழுந்திருக்கிறது.