ரஜினி ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்

 

ரஜினி ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்

கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் பலரையும் அழைத்து கருத்து கேட்டு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது ரஜினியை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தும் சந்தித்தார். அன்றிலிருந்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தவர் அர்ஜூன் சம்பத். அதே மாதிரி ரஜினி ஆன்மீக அரசியல் என்று அறிவித்ததும், அதுபற்றிய விமர்சனங்களுக்கும், குழப்பங்களுக்கும் ரஜினியின் பி.ஆர்.ஓ. மாதிரி இருந்து தொடர்ந்து விளக்கம் கொடுத்துக்கொண்டே வந்தார் அர்ஜூன் சம்பத்.

ரஜினி ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்

ரஜினி கட்சி தொடங்கியதும் அனைத்துக்கட்சி கூடாரங்களும் காலியாகிவிடும் என்று சொல்லி வந்தவர், கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் ரஜினி தீவிரம் காட்டியதும், 234 தொகுதிகளிலும் ரஜினிக்கு ஆதரவு என்று தெரிவித்தார் அர்ஜூன் சம்பத். கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்ததும், ரஜினியின் முடிவை வரவேற்கிறேன் என்றும் தெரிவித்தார் அர்ஜூன் சம்பத்.

ரஜினி ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்

இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி சொன்ன ஆன்மீக ஆரசியலையே முன்னெடுத்து செல்கிறார். இந்துக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றுதான் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் 180 தொகுதிக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்றும், வரும் 10-ம் தேதிக்குள் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, நேர்காணலும் நடத்தப்பட்டு, 11ம் தேதி அன்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினி ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்

அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறவும் கேட்டு வருகிறோம் . அந்த முயற்சியும் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் அர்ஜூன் சம்பத்.

ரஜினி ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்

தான் கட்சி தொடங்கவில்லை என்றதும், தனது ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று ரஜினி சொல்லி இருப்பதால், அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அர்ஜூன் சம்பத் நினைப்பதாகவும், அவர்களின் ஆதரவும் இருக்கிறது. அதானால்தான் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறார் என்றும் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.