2,700 பேரில் 2,300 பேர் எடப்பாடிக்கு ஆதரவு கடிதம்

 
ட்ரெ

அதிமுக  பொதுக்குழு உறுப்பினர்கள் 2700 பேரில்  2300 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்து அவருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்.

 அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை மறுதினம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.   இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   23 ஆம் தேதி அன்று நடைபெறும் பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட இருக்கின்றன.  

ப்ப்ப்

 இந்த பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பினர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும்,  அப்படியே பொதுக்குழு நடந்தால் அதில் ஒற்றை தலைமை தனி தீர்மானத்தைக் கொண்டுவர முடியாமல் செய்து விட வேண்டும் என்று பன்னீர்ச்செல்வம் தரப்பினர் நினைத்து வருகிறார்கள் என்று தகவல் .  ஆனால் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்து பொதுக்குழுவில் ஒற்றை தலைமை  அல்லது பொதுச்செயலாளர் என்கிற தனித் தீர்மானத்தை கொண்டு வந்துவிடலாம் என்று முயன்று வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

 இதற்காக  பொதுக்குழுவில் 2,700 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் 2300 பேர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.  அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் இந்த கடிதம் பெறப்பட்டிருக்கின்றன. 

பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டு நடத்தவும்  தீர்மானங்களை நிறைவேற்றவும்  அந்தக் கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் எழுதி கையெழுத்திட்டு இருக்கிறார்கள் .  அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில்  90% பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி நினைப்பது மாதிரி தனித்தீர்மானம் நிறைவேறும் என்று தெரிகிறது.  ஒற்றைத்தலைமை தீர்மானம் அல்லது பொதுச்செயலாளர் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.