23 தீர்மானங்கள் தயார்! ஓபிஎஸ் - இபிஎஸ் ஒப்புதலுக்கு காத்திருப்பு

 
mm

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற இருபத்தி மூன்று  தீர்மானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.  இந்த தீர்மானங்கள் 12 பேர் கொண்ட தீர்மான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளன.   கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரின் ஆதரவாளர்களும் அடங்கிய தீர்மான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானங்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திற்கும்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . இருவரின் ஒப்புதலுக்கு பின்னர் அது புத்தகமாக தயார் செய்யப்பட இருக்கிறது.

op

 முதலில்  12 பேர் கொண்ட திருமண குழுவினர் 15 தீர்மானங்கள் தான் வரைவு  செய்துள்ளனர்.  இதற்கு அடுத்தபடியாக 18 தீர்மானங்களை வரைவு  செய்திருந்தனர் . தற்போது இறுதியாக இருபத்தி மூன்று தீர்மானங்களை வரைவு செய்திருக்கின்றனர்.   இந்த இருபத்திமூன்று தீர்மானங்களில் ஒற்றை தலைமை தீர்மானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த இருபத்தி மூன்று தீர்மானங்களை யார், யார்  முன் மொழிவது,  வழி மொழிவது   என்கிற பட்டியலும் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. 

 ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி இருவரின் ஆதரவாளர்களும் அடங்கிய குழு கொண்டு வந்திருக்கும் இந்த தீர்மானங்கள் நாளை மறுநாள் சென்னை வானகரத்தில் நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கின்றன.