பாலியல் புகார் அளித்த பெண் காவல்துறை அதிகாரி மிரட்டப்படுவது அதிர்ச்சியளிக்கிறது…ஜோதிமணி எம்.பி.

பாலியல் புகார் அளித்த பெண் காவல்துறை அதிகாரி மிரட்டப்படுவது அதிர்ச்சியளிக்கிறது…ஜோதிமணி எம்.பி.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை புகார் அளிக்காமல் தடுக்க முயன்ற எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், சென்னை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

பாலியல் புகார் அளித்த பெண் காவல்துறை அதிகாரி மிரட்டப்படுவது அதிர்ச்சியளிக்கிறது…ஜோதிமணி எம்.பி.

இதையடுத்து இன்று, ‘’இந்த விஷயத்தில் சுயாதீனமான மற்றும் நியாயமான விசாரணையை நாங்கள் விரும்புவதால் டி.ஜி.பி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அச்சுறுத்தல்களைப் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வெட்கக்கேடானது’’என்று தெரிவித்திருந்தார்.

பாலியல் புகார் அளித்த பெண் காவல்துறை அதிகாரி மிரட்டப்படுவது அதிர்ச்சியளிக்கிறது…ஜோதிமணி எம்.பி.

இதையடுத்து கரூர் திமுக எம்.பி. ஜோதிமணியும், ‘’டிஜிபிக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் காவல்துறை அதிகாரி மிரட்டப்படுவதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இடைநீக்கம் செய்யாமல் டிஜிபி யை தொடர்ந்து பாதுகாக்கும் எடப்பாடி அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது. வெட்கக்கேடானது. உடனடியாக விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.