ஜெ., சிலை திறப்பு விழாவில் நடிகர் அஜித்குமாரின் பங்களிப்பு

ஜெ., சிலை திறப்பு விழாவில் நடிகர் அஜித்குமாரின் பங்களிப்பு

சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழாவில் நடிகர் அஜித்குமார் வடிவமைத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டது.

9 அடி உயர ஜெயலலிதாவின் வெண்கலை சிலையின் மேல் போர்த்தப்பட்டிருந்த பச்சை நிற துணியை இந்த ட்ரோன் மூலமாக அகற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடிகர் அஜித்குமார் வடிவமைத்த ட்ரோன் மூலமாக ஜெயலலிதா சிலைக்கு மலர்கள் தூவப்பட்டன. ட்ரோன் உதவி கொண்டு இவ்விழாவின் நிகழ்ச்சிகள் படம்பிடிக்கப்பட்டன.

ஜெ., சிலை திறப்பு விழாவில் நடிகர் அஜித்குமாரின் பங்களிப்பு

அஜித் மீது ஜெயலலிதா தனிப்பாசம் கொண்டிருந்தார். ஜெ., மீது அஜித்குமாரும் தனிமரியாதை கொண்டிருந்தார். அஜித் -ஷாலினியின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார் ஜெயலலிதா.

ஜெ., சிலை திறப்பு விழாவில் நடிகர் அஜித்குமாரின் பங்களிப்பு

அதிமுகவில் தனக்கு பிறகு அஜித்குமாரை நியமித்துவிடலாம் என்று ஜெயலலிதா யோசித்ததாகவும் பேச்சு எழுந்தது. அரசியல் வேண்டாம் என்று, ரசிகர் மன்றமே வேண்டாம் என்று அஜித் இருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு இந்த பேச்சு எழுந்தது.

ஜெயலலிதா மறைந்த பிறகு தனது மனைவி ஷாலினியுடன் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார் அஜித்.

ஜெ., சிலை திறப்பு விழாவில் நடிகர் அஜித்குமாரின் பங்களிப்பு

இந்நிலையில், ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழாவில் அஜித்குமாரின் ட்ரோன் பங்களித்திருப்பது அவரது ரசிகர்களையும், ஜெ., விசுவாசிகளையும் நெகிழ வைத்திருக்கிறது.

ஜெ., சிலை திறப்பு விழாவில் நடிகர் அஜித்குமாரின் பங்களிப்பு

அஜித்தின் தலைமையில் சென்னை எம்.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய ட்ரோன், உலகத்திலேயே அதிக நேரம் பறக்க கூடிய ட்ரோன் என்று சாதனை படைத்தது. 6 மணி 7 நிமிடங்கள் பறக்கும் இந்த ட்ரோன் 10 கிலோ எடை வரைக்கும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்.
பேரிடர் காலங்களில் மருந்து பொருட்களை சுமந்து செல்ல இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

ஜெ., சிலை திறப்பு விழாவில் நடிகர் அஜித்குமாரின் பங்களிப்பு

மெரினாவில் நேற்று ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நடைபெற்றுள்ள நிலையில், இன்று நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து, காமராஜர் கடற்கரை சாலையில் மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் 9 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறப்பு விழாவில், ஜெ. சிலைக்கு மலர்கள் தூவவும், சிலை திறப்பு விழாவினை படம் பிடிக்கவும் அந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டது.